மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்.11 இனி மகாகவி நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுப்பிரமணிய பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2021, 03:44 PM IST
மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்.11 இனி மகாகவி நாள்:  முதல்வர் மு.க.ஸ்டாலின் title=

தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை பெற்றவரும், சுதந்திர போராட்ட வீரரும் ஆன மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு தினமான செப்டம்பர் 11ம் தேதி இனி ஆண்டு தோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தேசப்பற்று, தமிழ் பற்று, தெய்வப் பற்று, மானுடப்பற்று என அனைத்து ஒருங்கே அமையப் பெற்ற மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தில் இந்த தினத்தில், மாநில அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுர்த் தொகையுடன், பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மேலும், இது தொடர்பாக வேறு வில முக்கிய அறிவிப்புக்களையும் வெளியிட்டுள்ளார்:

- பாரதியார் உருவ சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்கள் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

- பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும்.

- பாரதியின் கையெழுத்து பிரதிகள் தேடி தொகுக்கப்பட்டு, அவை வடிவன் மாறாமல், செம்பதிப்பாக வெளியிடப்படும். 

- பாரதியாரின் நூல்கள், அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள், தொகுக்கப்பட்டு, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும்,, மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தில் வைக்கப்படும்.  இதற்காக பாரதியியல் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

- உலக தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் பாரெங்கும் பாரதி என்ற தலைப்பில் நடத்தப்படும். 

- திரைப்படங்களில் இடம் பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே நடைபெறும் இசைக் கச்சேரி நடத்தப்படும் 

- உத்திர பிரதேசத்தில் உள்ள காசியில், பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்படும்.

ALSO READ | விநாயகரின் திருவருளால்‌ உலகில் அன்பும்‌, அமைதியும்‌ நிறையட்டும்‌ : EPS-OPS வாழ்த்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News