TVK : கட்சியின் முதல் உறுப்பினர் ஆனார் விஜய்... முதல்முதலாக பேசி வீடியோவும் வெளியீடு

Tamilaga Vetri Kazhagam: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவரின் வீடியோவும் வெளியிடப்பட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 8, 2024, 06:36 PM IST
  • தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக சேர்வதற்கான வழிமுறைகள் அறிமுகம்.
  • தலைவர் விஜய் இதுகுறித்து விளக்கம் அளித்த வீடியோ வெளியிட்டுள்ளார்.
  • வாட்ஸ்அப், டெலிகிராம், வெப் யூசர்களுக்கு தனித்தனி QR Code வெளியிடப்பட்டுள்ளது.
TVK : கட்சியின் முதல் உறுப்பினர் ஆனார் விஜய்... முதல்முதலாக பேசி வீடியோவும் வெளியீடு title=

Tamilaga Vetri Kazhagam President Vijay: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவரின் வீடியோவும் வெளியிடப்பட்டது. 

கடந்த பிப். 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் பதிவு செய்தார். அக்கட்சியின் தலைவராக செயல்படும் அவர் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து இந்த கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடாது என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் நடிகர் விஜய், கட்சியின் முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியிருந்தார். 

தொடர்ந்து, தற்போது நடித்து வரும் திரைப்படத்திற்கு பின்னர் ஒப்பந்தமாகி உள்ள மற்றொரு திரைப்படத்தில் மட்டுமே தான் நடிக்கப்போவதாகவும் அதன்பின் சினிமாவுக்கு முழுக்குப் போட்ட பின் அரசியலில் முழு கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் அதில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் இடையே ஆலோசனை மேற்கொள்வது, நலத்திட்ட உதவிகளை மேற்கொள்வது என மக்கள் இயக்க பணியை கட்சியின் பெயரில் தொடர்ந்து வந்தனர். 

மேலும் படிக்க | அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிட மறுக்கிறார்? பரம ரகசியம் இதுதான்

அதுமட்டுமின்றி கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி வெளியிடப்படும் என கட்சியின் தலைமை கூறி வந்த நிலையில், இன்று முதல் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைமுறையை நடிகர் விஜய் தொடங்கிவைத்தார். அதற்கான செயலி ஏதும் வெளியாகாத நிலையில், வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் வெப் பயனர்களுக்கான வெவ்வேறு QR கோடுகள் கொடுக்கப்பட்டு அதன் மூலம் உறுப்பினராக சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வீடியோவில் பேசிய நடிகர் விஜய், "முதல் உறுப்பினராக சேர்ந்து, என்னுடைய உறுப்பினர் அட்டையை நான் எடுத்துவிட்டேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கை பின்பற்றி, வரும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கி, என்னுடன் கைக்கோர்த்து செல்ல, நாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட உறுதிமொழியை வாசித்து அது பிடித்திருக்கும்பட்சத்தில் எங்கள் கட்சியில் உறுப்பினராக சேருங்கள்" என கூறியுள்ளார். 

மேலும், கட்சியில் உறுப்பினராக சேருவதற்கான உறுதிமொழி மற்றும் உறுப்பினராக சேர்வதற்கான வழிமுறைகளையும் நடிகர் விஜய் அவரின் கட்சியின் அதிகாரப்பூர்வ X பக்கத்தின் மூலமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | திமுகவின் வெற்றி பார்முலா... திருமா ஓகே சொல்ல என்ன காரணம்? - முழு விவரம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News