இடைத்தேர்தல்: 3 தொகுதி பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

Last Updated : Oct 27, 2016, 06:41 PM IST
இடைத்தேர்தல்: 3 தொகுதி பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு title=

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் அடுத்த மாதம் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தலில், அதிமுக, திமுக, பாஜக, பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

அதிமுக., திமுக., பாமக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இன்று டெல்லியில் அமைந்துள்ள பாஜக கட்சி தலைமை அலுவலகம், தங்கள் கட்சி சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மேலும் சில மாநிலங்களின் தொகுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

சீனிவாசன் திருப்பரங்குன்றத்திலும், எம்.எஸ்.ராமலிங்கம் அவர்கள் தஞ்சாவூர் தொகுதியிலும், எஸ்.பிரபு அவர்கள் அரவக்குறிச்சி தொகுதியிலும் போட்டியிடுவதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளராக கே.சி. பழனிசாமி, அதிமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி, பாமக வேட்பாளராக பாஸ்கரன் ஆகியோர் போட்டியிடு வதாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

தஞ்சாவூர் தொகுதி திமுக வேட் பாளராக அஞ்சுகம் பூபதி, அதிமுக வேட்பாளராக ரங்கசாமி, பாமக வேட்பாளராக குஞ்சிதபாதம் ஆகியோர் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளராக டாக் டர் சரவணன், அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ், பாமக வேட்பாளராக செல்வம் ஆகியோர் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Trending News