2021-க்குள் மின்பாதைகள் புதைவட மின்கம்பிகளாக மாற்றப்படும்?

2021-க்குள் சென்னையில் உள்ள மின்பாதைகள் புதைவட மின்கம்பிளாக மாற்றப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jul 12, 2019, 11:31 AM IST
2021-க்குள் மின்பாதைகள் புதைவட மின்கம்பிகளாக மாற்றப்படும்? title=

2021-க்குள் சென்னையில் உள்ள மின்பாதைகள் புதைவட மின்கம்பிளாக மாற்றப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் மழைக்காலத்தில் மின்கசிவால் அடிக்கடி விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகிறது; கொளத்தூரில் புதைவட மின்கம்பிகளாக மாற்ற நடந்துவரும் பணிகளை இந்தாண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, 2021-க்குள் சென்னையில் உள்ள மின்பாதைகள் புதைவட மின்கம்பிகளாக மாற்றப்படும் என தெரிவித்தார். மேலும் புதைவிட மின்கம்பிகளாக மாற்ற சென்னைக்கு மட்டும் ரூ.2567 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த ஜூலை 7-ஆம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட நேருநகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதைவட மின்கம்பிகள் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, சைதாப்பேட்டை பகுதியில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், சென்னையில் அடுத்த ஓரிரு ஆண்டிற்குள் புதைவட தடங்கள் அமைக்கும் பணிகள் முழுமையடையும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஊராட்சிக்கு ஒரு துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கேள்வி எழுப்பிய மேலூர் உறுப்பினருக்கு பதிலளித்த அமைச்சர், அதற்கு சாத்தியம் இல்லை எனக் கூறினார். மின் பளுவுக்கு ஏற்ற வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்து தரும் இடங்களில், துணை மின் நிலையம் அமைக்க அரசு முன் வரும் என்றும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News