கேப்டன் விஜயகாந்த் இறுதிச் சடங்கு எப்போது? முழு விவரம்

கேப்டன் விஜயகாந்த் இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது. தேமுதிக தலையகத்தில் அவரது பூத உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 28, 2023, 06:28 PM IST
  • கேப்டன் விஜயகாந்த் இறுதிச் சடங்கு
  • நாளை சென்னையில் நடக்கிறது
  • மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் அடக்கம்
கேப்டன் விஜயகாந்த் இறுதிச் சடங்கு எப்போது? முழு விவரம் title=

தமிழ்நாடு முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், இன்று காலை 6.10 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது. இதனையடுத்து அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரு, எவ வேலு உள்ளிட்டோர் அவருடன் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அத்துடன் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் கலைஞர் கருணாநிதி மீது ஆழமான அன்பை கொண்டிருந்த விஜயகாந்த் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த துயரில் இருந்து தன்னை தானே தேற்றிக் கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் உருக்கமாக கூறினார். மேலும், விஜயகாந்த் உடல் அடக்கத்துக்கு தமிழ்நாடு அரசின் முழு மரியாதை கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் படிக்க | மருத்துவர்கள் சொல்லியும் கேட்காமல் 2016 -ல் பிரச்சாரத்துக்கு சென்ற விஜயகாந்த்

பின்னர், விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து கண்ணீர்மல்க கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தொடர்ச்சியாக வந்து மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். 

நாளை வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் விஜயகாந்தின் தேமுதிக அலுவலகத்திலேயே அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு அரசு மரியாதை கொடுக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News