சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றிய விபத்து! தாம்பரத்தில் பரபரப்பு

Car Fire Accident: சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த விபத்து பார்த்தவர்களை பதைபதைக்கச் செய்தது. இந்த எதிர்பாராத விபத்தால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 3, 2022, 11:22 AM IST
  • சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது
  • பார்த்தவர்களை பதைபதைக்கச் செய்த கார் விபத்து
  • அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 9 பேர்
சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றிய விபத்து! தாம்பரத்தில் பரபரப்பு title=

சென்னை: சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த விபத்து பார்த்தவர்களை பதைபதைக்கச் செய்தது. இந்த எதிர்பாராத விபத்தால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தாம்பரம் தீயணைப்பு துறை இரண்டு வாகனங்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சென்னை தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அருண்குமார், தனது உறவினர் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். காரில் அருண்குமாரின் மைத்துனர் மற்றும் சித்தப்பா குழந்தைகளும் உடன் இருந்தனர். 

காரில் அவர்கள் வந்துக் கொண்டிருந்தபோது, வேங்கை வாசல் சந்தோஷபுரம் சிக்னல் அருகே தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில் பள்ளிக்கரணையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. மகேந்திரா டியூவி என்ற வாகனத்தை ஓட்டி வந்துகொண்டிருந்த அருண்குமார் காரை நிதானமாகவே ஓட்டிவந்தார்.

மேலும் படிக்க | சென்னையில் 537 லாட்ஜ், மேன்ஷன்களில் காவல்துறை அதிரடி சிறப்பு சோதனை 

திடீரென வாகனத்தில் அடைப்பு ஏற்படுவது போல வண்டி நின்று நின்று சென்றதால் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வண்டியின் முன் பக்க பேனட்டை திறக்க சென்றார் அருண்குமார். அது திறக்கவில்லை, ஆனால் திடீரென இஞ்சின் இருக்கும் பகுதியில் இருந்து வெள்ளை நிறத்தில் புகை வர தொடங்கியது. பின்னர் கரும் புகையாக மாறியது.

சற்று நேரத்தில் வாகனம் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. காரை நிறுத்தியதும், அருண்குமாருடன் இருந்த, இரண்டு பெண்கள் 5 குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் வாகனத்தை விட்டு இறங்கி நின்றுக் கொண்டிருந்தார்கள். அதனால், உயிர்ச்சேதம் எதும் ஏற்படவில்லை.

மேலும் படிக்க | எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட தீ! 7 பேர் பலி!

விபத்து குறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு துறை மற்றும் பயிற்சி மையத்தைச் சேர்ந்த இரண்டு வாகனங்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதனால் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், வாகனம் தீ பற்றியதுக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | மதுபோதையால் விபத்து - அரசு பேருந்தின் மீது மோதிய ஷேர் ஆட்டோ... சிகிச்சையில் ஓட்டுநர்

மேலும் படிக்க | Bad Debts: வங்கிகளின் வாராக்கடன் 60000 கோடி ரூபாயா? செபியின் அதிர்ச்சி அறிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News