கூகுள் மேப்பை பார்த்து பயணம்; கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிய கார்!

Viral video: திருக்கோவிலூரில் கூகுள் மேப்பை பார்த்தவாறு பயணம் செய்த நபர், கழிவு நீர் வாய்க்காலில் காரை இறக்கி உள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Nov 29, 2022, 11:19 AM IST
  • கூகுள் மேப்பை பார்த்து சென்ற நபர்.
  • கழிவு நீர் காவாயில் விழுந்த கார்.
  • காரில் இருந்த அனைவரும் காயங்கள் இன்றி தப்பினர்.
கூகுள் மேப்பை பார்த்து பயணம்; கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிய கார்! title=

சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள ஸ்ரீ ஞானானந்தகிரி தபோவனம் மடத்திற்கு வந்துள்ளார்.  அங்கிருந்து நேற்று இரவு கூகுள் மேப் உதவியுடன் கீழையூர் பகுதியில் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தபோவனம் மடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார்.  

மேலும் படிக்க: தொட்டதற்கெல்லாம் லஞ்சம்.. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குவிந்த பொதுமக்கள்

இந்நிலையில், கோவிலில் இருந்து நேராக சென்று வலப்புறம் உள்ள பாலத்தில்  திரும்பி செல்ல கூகுள் மேப் காட்டியுள்ளது. ஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத ஸ்ரீராம் மெயின் ரோட்டில் செல்வதற்கு பதிலாக தென்பெண்ணை ஆற்றலுக்கு செல்லும் குறுகிய சாலையில் கூகுள் மேப்பை பார்த்தவாரே சென்றுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக குறுகிய சாலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கார் இறக்கி உள்ளது. 

 

இந்த சம்பவத்தில் காரில் இருந்த அனைவரும் சிறிய காயங்கள் கூட இன்றி தப்பிவிட, கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிய காரை ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர், கிரேன் உதயோடு மீட்கப்பட்டது. கூகுள் மேப் பார்த்தவாறு தவறான பாதையில் சென்றதால் கார் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஜல் சக்தி அமைச்சர்! நீர் வளத் துறை முதலீடு பற்றி தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News