கோவை தெற்கில் வானதி சீனிவாசனின் வெற்றி தொடர்பான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் தேர்தல் வழக்கில், எந்த ஒரு  ஆதாரங்களும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 01:32 PM IST
கோவை தெற்கில் வானதி சீனிவாசனின் வெற்றி தொடர்பான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்  title=

கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றது செல்லும் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனை விட, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தேர்தல் (TN Assembly Elections) வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியை சேர்ந்த கே.ராகுல் காந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் தேர்தல் வழக்கில், எந்த ஒரு  ஆதாரங்களும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜக சார்பில் வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan), அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிட்டனர்.

 

ALSO READ | உட்கட்சி தேர்தலில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது: நீதிமன்றம்

ALSO READ | யூட்யூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News