உட்கட்சி தேர்தலில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது: நீதிமன்றம்

உட்கட்சி தேர்தலில் தலையிட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 14, 2021, 11:39 AM IST
உட்கட்சி தேர்தலில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது:  நீதிமன்றம் title=

அ.தி.மு.க. கட்சி  விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி அமைப்புகளுக்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 2-ந் தேதி அறிவிக்கப்பட்டது.  அதில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். 

அ.தி.மு.க (ADMK) ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியையும் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்ககூடாது என அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

ALSO READ | ‘அம்மா வழியில் அதிமுக’ EPS, OPS போட்டியின்றி தேர்வு?

இந்த வழக்கு முன்னதாக, 7ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தானா என்று ஆராய்ந்த பிறகு, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதங்களை முழுவதும் கேட்டறிந்த, பின்பு இந்த வழக்கு மீதான உத்தரவை நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியையும் தேர்வு செய்ததை  தேர்தல்ஆணையம் அங்கீகரிக்ககூடாது என தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு மனு தள்ளுபடி செய்தனர்.

ALSO READ | அதிமுக புதிய பொதுச்செயலாளர் விரைவில் தேர்வு- பொன்னையன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News