காவிரி விவகாரம்: அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் -முதல்வர்

11 ஆண்டுகலாக நடைபெறும் காவிரி விவகாரம் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தின் முழு விவரம். 

Last Updated : Feb 22, 2018, 03:50 PM IST
காவிரி விவகாரம்: அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் -முதல்வர் title=

காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அப்பொழுது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கருத்து வேறுபாடுகள் நமக்குள் இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.


காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் அண்மையில் இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கான பங்கை குறைத்து பெங்களுரு குடிநீர் தேவைக்காக அதனை வழங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் இந்த கூட்டம் நடை பெற்றது.காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன. 

அந்த வழக்குகள் மீது கடந்த 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டு இருந்தது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. 

அதன் படி  இன்று  கூடிய அனைத்துக்கட்சி கூட்டம்  கூட்டத்திற்கு  எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.  இந்த் கூட்டத்தில் 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில்  தி.மு.க செயல் தலைவர் கி.வீரமணி, சீமான், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன், திருநாவுக்கரசர், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், வாசன், எல்.கே.சுதீஷ், கிருஷ்ணசாமி, தமிமுன் அன்சாரி, கொங்கு ஈஸ்வரன், சரத்குமார், கருணாஸ்,செ.கு.தமிழரசன், வேல்முருகன், கிருஷ்ணசாமி,கதிரவன், ஜான்பாண்டியன், ஜெகன்மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார், புதிய நீதிக்கட்சி ரவிக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி துவக்க உரையை வாசித்தார். அரசுக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்க எதிர்கட்சிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். காவிரி விவகாரத்தில் அரசு எடுத்துள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து பேசத்துவங்கிய அனைத்து கட்சி அமைச்சர்களின் உரை; 

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:- 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பு சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கூறினார். அதையடுத்து, காவிரியை தனக்கே சொந்தமாக்கி கொள்ளும் கர்நாடகாவின் சுயநல போக்கு இன்றுவரை மாறவில்லை என்றும் அவர் கூறினார். 

கர்நாடகா வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி நீரை தடையின்றி உரிய காலத்தில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை முதல்வர் பேசினார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:-  

காவிரி உரிமையை நிலைநாட்ட அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக ஆதரவு அளிக்கும். காவிரியை தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளும் கர்நாடகாவின் சுயநலப்போக்கு இன்றுவரை மாறவில்லை. பிரதமரைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:- 

காவிரி வழக்கில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்ட பாரதீய ஜனதா துணை நிற்கும். காவிரியில் குறைக்கப்பட்ட நீரை திரும்பப் பெற சட்டப்படி நடவடிக்கை தேவை.  அடுத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது என கூறினார்.

இதையடுத்து, காவிரி விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மீண்டும் ஒருமுறை அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமருக்கு அழுத்தம் தர மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். 

Trending News