சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி கொடுத்த பாலியல் புகார் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண் எஸ்பி நடந்த பாலியல் புகார் மீது 6 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் வரும்போது, துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் பாலியல் புகார் மீது தாமதம் செய்ததற்கு கண்டனமும் தெரிவித்தார் நீதிபதி. லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி கூறிய பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் பெண்கள் பணி செய்யும் இடங்களில் அவர்களுக்கு நிகழும் பாலியல் தொல்லையை தடுக்கும் வகையில் தமிழகத்தில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை உயர் அதிகாரிகளின் அறைகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும். இந்த பணியை இரண்டு வாரங்களில் முடிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.