கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி...!

கீழடி உட்பட நான்கு இடங்களில் அடுத்தக்கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Updated: Oct 24, 2019, 06:22 PM IST
கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி...!

கீழடி உட்பட நான்கு இடங்களில் அடுத்தக்கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கீழடியில் தற்போது அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் ஏற்கனவே தமிழர்களின் பெருமை மற்றும் தொன்மையை பறைசாற்றும் பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய  நான்கு இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

நடைப்பெற்று வரும் கீழடி அகழாய்வில் நகர நாகரிகத்தின் அடிப்படை ஆதாரமான வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நீர் மேலாண்மையில் சங்ககால மக்களின் சிறந்த தொழில்நுட்பம் நம்மாள் அறிந்துக்கொள்ள முடிகிறது.

முன்னதாக கீழடியில் கடந்த ஜுன் 13-ம் தேதி தமிழக தொல்லியல் துறை ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியை தொடங்கியது. 5 பேருக்கு சொந்தமான நிலங்களில் 52 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு பணிகள் நடைப்பெற்றன. இதில் 800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.

கடந்த ஒரு மாத காலமாக அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தை ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர். அகழாய்வில் அறியப்பட்ட இரட்டைச்சுவர், வட்டப்பானை, சுடுமண் குழாய், தண்ணீர் தொட்டி, தண்ணீர் கால்வாய் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் இடம், வரைபடம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

அகழாய்வு நிறைவு பெற்றதை அடுத்து தற்போது அடுத்தக்கட்ட அகழ்வாய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கீழடியுடன் ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.