இன்றைய வானிலை முனறிவிப்பு: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..! 

Last Updated : Jul 29, 2020, 05:02 PM IST
இன்றைய வானிலை முனறிவிப்பு: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! title=

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..! 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், நீலகிரி வேலூர் ,கோவை ,தேனி ,ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால்-இவைகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், 27.07.2020 அன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

ALSO READ | கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் தான்: EPS

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்சையொட்டி இருக்கும்.கடந்த 24 மணிநேரத்தில் ஊத்தங்கரை, ஏற்காடு, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ.,க்கு மேல் மழைப்பதிவாகியுள்ளது. 

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News