இறுதி பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரம் வாக்களர்கள்!

இறுதி வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்களர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!!

Updated: Feb 14, 2020, 09:00 PM IST
இறுதி பட்டியல் வெளியீடு: தமிழகத்தில்  6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரம் வாக்களர்கள்!

இறுதி வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்களர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!!

வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் 23.12.2019 முதல் 22.01.2020 முடிய பெறப்பட்டன.

அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால் நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்ற தொகுதியினைச் சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது. ஏற்பளிப்பு செய்யப்பட்ட படிவங்கள் அடிப்படையில் 2020-ம் ஆண்டிற்கான இறுதிப்பட்டியல் மற்றும் துணைப்பட்டியல் தயார் செய்யப்பட்டன.

இதனை மாநகராட்சி கமி‌ஷனரும், தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் வெளியிட்டார். தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்களர்கள் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து தொள்ளாயிரத்து 69 பெண் வாக்காளர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 6 ஆயிரத்து 497 என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 317 வாக்காளர்களும் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் தொகுதி ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 337 வாக்காளர்களுடன் உள்ளது. 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் மொத்தம் 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின்போது, 18, 19 வயதுடையவர்கள் 5 லட்சத்து 85 ஆயிரத்து 580 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http//elections.tn.gov.in என்ற இணைய முகவரிக்குள் சென்று வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தேர்தல் பதிவு அலுவலர்களை நேரடியாக சந்தித்து படிவங்களை பூர்த்தி செய்து பெயரை இணைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

www.nvsp.in என்ற இணைய முகவரிக்குள் சென்றும் பிளே ஸ்டோரில் கிடைக்கும் வாக்காளர் உதவி செயலி என்ற செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.