பணப்பட்டுவாடா செய்தவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா?: HC கேள்வி

வேலூர் தேர்தலை ரத்து செய்ய கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி....

Last Updated : Apr 17, 2019, 01:00 PM IST
பணப்பட்டுவாடா செய்தவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா?: HC கேள்வி  title=

வேலூர் தேர்தலை ரத்து செய்ய கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி....

வேலூர் மக்களவை தொகுதியில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த தொகுதியில் தேர்தளை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சுகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், தேர்தல் அறிவிப்புக்கு தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட குடியரசு தலைவருக்கு அதிகாரமில்லை எனவும், முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளர்களை  தகுதி நீக்கம் செய்யதான் அதிகாரம் உள்ளது எனவும், ஆகவே தேர்தல் ரத்து அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. மேலும், இயற்கை பேரிடர், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளின் போது மட்டுமே தேர்தலை ரத்துசெய்ய அல்லது ஒத்திவைக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதி மணிக்குமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.சி. சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வாதாடினார்.  

வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்ய கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினர். மேலும், குறிப்பிட்ட சில வேட்பாளர்களை மட்டும் எப்படி தகுதி நீக்க முடியும்? அவ்வாறு தகுதி நீக்கம் செய்த பின் அவர் பணப்பட்டுவாடா செய்யவில்லை என நிரூபித்தால் அப்போது தவறாகி விடாதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வெற்றிபெற்ற வேட்பாளரை மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவச்சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும் என தெரிவித்தனர். 

 

Trending News