சென்னை, திருமுல்லைவாயலில் 102 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த புத்தாண்டை ஆவடியைச் சேர்ந்த ’ரிடெயின்ஸ் ஸ்மைல்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், அவர்களுடன் இணைந்து கொண்டாடியது. அனைத்து குடும்பங்களுக்கும் புத்தாடை வழங்கப்பட்டது. இதனை அணிந்து வந்த மக்கள் அனைவருக்கும், இசை, நடனம், ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் ஆர்வமுடன் பெண்கள் கலந்து கொண்டு தங்களின் ஸ்டைலான தனித்திறமையை வெளிப்படுத்தினர். இதேபோல், குழந்தைகளும் ஒய்யாரமாக அணிவகுப்பு செய்து காட்டினர். ஒரே மாதிரியான சேலையை அணிந்து பெண்கள் அனைவரும், உற்சாகமாகவும், போட்டி மனப்பான்மையுடன் விளையாடினர். பின்னர், திரைப்பட பாடலுக்கு கணவன், மனைவி ஜோடியாக நடனமாடினர்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஸ்மைல் ரீட்டெயின்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ராகுல் போரா மற்றும் அதன் நிர்வாகிகள் நேரில் கலந்து கொண்டு மக்களை உற்சாகப்படுத்தினர். முடிவில், கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்ற அவர்கள், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 25 கிலோ அரிசி மற்றும் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில் பேசிய ராகுல்போரா, நரிக்குறவர் இன மக்களை, சக மனிதர்களாக ஏற்கும் போக்கு சமுதாயத்தில் இல்லை. இதனால், இந்த எண்ணம் சமூகத்தில் மாற்றப்பட வேண்டும் என்கிற நோக்கில், அவர்களுடன் இணைந்து இந்தப் புத்தாண்டை கொண்டாடினோம் எனத் தெரிவித்தார்.
ALSO READ | MARS TRANSIT: இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட அலை வீசப்போகிறது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR