நாளை முதல் பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்- தென்னக ரயில்வே

நாளை முதல் பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 24, 2021, 02:57 PM IST
நாளை முதல் பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்- தென்னக ரயில்வே title=

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்ற நிலையில் கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது தொற்று பாதிக்கப்படு வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 

அதைத்தொடர்ந்து ஊரடங்கு (TN Lockdown) கட்டுப்பாடுகளை மாநில அரசு படிப்படியாக தளர்த்தி வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னையில் (Chennai) நாளை முதல் புறநகர் ரயில் சேவை இயங்கும் என்று தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்ததாக தகவல் வெளியானது. 

ALSO READ | Bus Pass Validity: 1000 ரூபாய் பாஸ் ஜூலை 15 வரை செல்லும்

பெண் பயணிகள் 24 மணி நேரமும் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த அனுமதி. ஆண் பயணிகளுக்கு கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டும் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி. ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் மாஸ்க் அணியாமல் சிக்கினால் ரூ.500 பராதம் விதிக்கப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | ஜவுளி, நகைக்கடைகளை திறக்க அனுமதி வழங்க வணிகர் சங்கம் கோரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News