)
Chidambaram Tamil Nadu Lok Sabha Election Result 2024: சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணி ஆதரவுடன் இம்முறை மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தடா ராஜேந்திரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை அக்கட்சி நிற்கவைக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தொகுதியில் வேலை பார்த்து வந்த அவர், சீட் கொடுக்காத அதிருப்தியில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானார். அத்துடன் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். பாஜகவில் கார்த்தியாயினி, அதிமுகவில் சந்திரகாசன், நாம் தமிழர் கட்சியில் ஜான்சி ராணி ஆகியோர் போட்டியிட்டனர்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள்
சிதம்பரம்,
அரியலூர்,
ஜெயங்கொண்டம்,
புவனகிரி,
சிதம்பரம்,
காட்டுமன்னார்கோயில் (தனி),
குன்னம்
சிதம்பரம் தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை
மொத்த வாக்காளர்கள் - 15,19,847
ஆண் வாக்காளர்கள் - 7,53,643
பெண் வாக்காளர்கள்- 7,66,118
மூன்றாம் பாலினத்தவர் - 86
சிதம்பரம் (தனி) தொகுதி 2019 நிலவரம்
வெற்றி பெற்றவர் - திருமாவளவன் விசிக - பெற்ற வாக்குகள் - 500229
இரண்டாம் இடம் -கோ.சந்திரசேகர் அதிமுக - பெற்ற வாக்குகள் - 497010
மூன்றாம் இடம் - இளவரசன் அமமுக - பெற்ற வாக்குகள் - 62308
சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள்
விசிக - திருமாவளவன்
அதிமுக - சந்திரஹாசன்
பாஜக - கார்த்தியாயினி
நாதக - ஜான்சி ராணி
சிதம்பரம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
சிதம்பரம் தொகுதியில் கடந்த முறை பெரும் பதட்டத்துக்கு இடையே வெற்றி பெற்ற தொல் திருமாவளவன், இம்முறை எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் அமோக வெற்றியை உறுதி செய்ய இருக்கிறார். பாஜகவில் ஒருவேளை தடா ராஜேந்திரன் போட்டியிட்டிருந்தால் கொஞ்சம் போட்டியை கொடுத்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அவருக்கு சீட் கிடைக்காததால் பாஜகவினரே பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல், திருமாவளவனை ஒப்பிடும்போது அதிமுகவில் உள்ளிட்ட எந்த வேட்பாளரும் பிரபலமானவர்கள் இல்லை. இதுவும் திருமாவளவனுக்கு கூடுதல் பலம் என்பதால் அவர் எந்த நெருக்கடியும் இல்லாமல் வெற்றியை உறுதி செய்கிறார். எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என்பதே இப்போதைய கேள்வி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata