சிதம்பரத்தில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி கும்பிட முயற்சித்த பெண்ணை தீட்சிதர்கள் ஆபாசமாக பேசி விரட்டியடித்த சம்பவத்தில் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அதேபோல் கணேஷ் தீட்சிதரை கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்த வழக்கில் 3 தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு பெயர் போன சிதம்பரம் நடராஜர் கோவிலில் அடுத்தடுத்து தீட்சிதர்கள் மேல் கடுமையான வழக்குகள் பாய்ந்துவரும் நிலையில் அவர்கள் விரைவில் கைதாவார்கள் என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | கோயில்களில் திருடப்பட்ட 11ம் நூற்றாண்டை சேர்ந்த சிலைகள் மீட்பு!
கடவுளின் குழந்தைகள் என சொல்லிக் கொள்ளும் தீட்சிதர்கள் எப்போது சர்ச்சைகளில் சிக்கத் தவறுவதில்லை. நந்தனார் மர்மம் தொடங்கி இப்போது வரை நடராஜர் கோவிலில் ஜாதிய தீண்டாமை உள்ளதாக குற்றம் சாட்டுப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது அடுத்தடுத்து இரண்டு சர்ச்சைகளில் சிதம்பரம் கோயில் சிக்கியுள்ளது. சிதம்பரத்தை சேர்ந்த ஜெயஷீலா திருசிற்றம்பல மேடையில் ஏறி சாமி கும்பிட முயன்றபோது 20க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கூடி அவரை தகாத வார்த்தைகளில் திட்டி கோயிலில் இருந்து வெளியே அனுப்பினர். இந்த விடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
கொரோனா காரணமாக சிற்றம்பல மேடையில் யாரையும் ஏற விடுவதில்லை என தீட்சிதர்கள் விளக்கம் அளித்தாலும் தான் தலித் என்பதாலேயே கீழ்த்தரமாக நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஜெயஷீலா கூறுகிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக காவல்துறை 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பிரயோகித்துள்ளது. ஜாதிய ரீதியாக பாகுபாட்டுடன் ஜெயஷீலாவை நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தீட்சிதர்கள் கைதாகலாம் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையே கோயிலில் பூஜை செய்யும் கணேஷ் தீட்சிதர் கோயில் விதிமுறைகளை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் கோயிலுக்குள் நுழைந்ததால் 3 தீட்சிதர்கள் அவரை தாக்கியுள்ளனர். இந்த வழக்கிலும் அந்த மூவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளிலுமே பிணையில் வெளிவர முடியாத சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் தீட்சிதர்கள் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | பக்தர்கள் இன்றி பக்தியுடன் வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR