உலகம் முழுவதும் இன்று யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 1197 சதுர கி.மீ பரப்பளவு உள்ள அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் என மொத்தம் 4 யானை காப்பகங்கள் இருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக அகஸ்தியர் மலை அமைகிறது. இதுகுறீத்த உத்தரவை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சரின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ உலக யானைகள் நாளில், தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
On #WorldElephantDay2022, I'm glad that Tamil Nadu gets its 5th Elephant Reserve at Agathiyamalai in Tirunelveli District .
Elephants play a critical role in balancing the forest ecosystems. The majestic mammals are nature's assets that we must conserve at all costs. pic.twitter.com/5jt1WbphHT
— M.K.Stalin (@mkstalin) August 12, 2022
கானுயிர்ச் சூழலமைப்புகளின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் மிக முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. இயற்கையின் கொடையான இந்த மிடுக்குமிகு பாலூட்டிகளை எவ்விலை கொடுத்தேனும் நாம் பாதுகாக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | அரங்கு அமைக்க விருப்பமில்லை அதனால் பீஃப் இல்லை - அமைச்சர் சுப்பிரமணியன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ