குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த CBCID அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 30 ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டிருப்பதாக ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா பேசிய ஆடியோ வெளியானது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர்கள் நிஷா, லீலா, அருள் மணி, செல்வி உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு கடந்த 29-ஆம் தேதி CBCID விசாரணைக்கு மாற்றப்பட்டது. அந்தவகையில் CBCID விசாரணை அதிகாரிகளாக கிருஷ்ணன், சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் ஆய்வாளர் பிருந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.