அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை மீட்டது சிஐடி!

அதிமுக அலுவகத்தில் இருந்து ஓபிஎஸ் எடுத்து சென்றதாக கூறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் சிஐடி போலீசார் கைப்பற்றி உள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Sep 26, 2022, 01:11 PM IST
  • ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே கடும் போர்.
  • இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு.
  • கடும் அதிருப்தியில் தொண்டர்கள்.
அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை மீட்டது சிஐடி! title=

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பு குவிந்தனர்.  ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கல்வீச்சு தாக்குதல்களும் நடைபெற்றது.  இதற்கு இடையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பூட்டி இருந்த அதிமுக அலுவலகத்திற்குள் நுளைந்தனர்.  பின்பு அங்கு இருந்த ஆவணங்களை தனது வாகனத்தில் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த மருத்துவரால்  பரபரப்பு: வீடியோ வைரல்

இந்நிலையில், அதிமுக கழக அமைப்பு செயலாளர் சிவி சண்முகம், அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை ஓபிஎஸ் திருடி சென்றதாக புகார் அளித்து இருந்தார்.  இந்த  புகாரின் அடிப்படையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் அதிமுகவில் அலுவலகத்தில் இருந்து காணாமல் போன ஆவணங்கள் அனைத்தையும் மீட்டனர்.  காணாமல் போன அலுவலக பத்திரம், ஜானகி எழுதி கொடுத்த ஆவணம், அண்ணா டிரஸ்டின் ஆவணம், பாண்டிச்சேரி, திருச்சி மற்றும் மதுரையில் உள்ள கட்சியின் சொத்து பத்திரம் ஆகியவை உள்ளிட்ட 113 ஆவணங்களை மீட்டனர்.

மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடம் இருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.  அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | கடலூர்: செல்போன் மூலம் மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக புகார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News