கடலூர்: செல்போன் மூலம் மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக புகார்

Cuddalore: குழந்தை இறந்தற்கு காரணமான இரண்டு நர்சுகள் இரண்டு உதவியாளர்கள் மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 1, 2022, 03:59 PM IST
  • போன் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்கள்.
  • குழந்தை பரிதாபமாக இறந்தது.
  • குழந்தையின் தந்தை போலீசில் புகார்.
கடலூர்: செல்போன் மூலம் மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக புகார் title=

கடலூர்: செல்போனில் ஒருவர் பிரசவம் பார்ப்பதற்கான வழிமுறையை விளக்க, அதை பார்த்து வேறொருவர் பிரசவம் பார்த்து, குழந்தையை பத்திரமாக தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுக்கும் பல காட்சிகளை நாம் பல படங்களில் பார்த்துள்ளோம். அதே போல் ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது. ஆனால், இதன் முடிவு நல்ல முடிவாக இருக்கவில்லை. செல்போன் மூலம் மருத்துவர்கள் மருத்துவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெபராஜ். இவர் காவல் நிலையத்தில் இந்த புகாரை அளித்துள்ளார். 

அவர் தனது புகாரில், தனது மனைவி ஜெஸ்ஸி ஜெனிபர் பிரசவத்திற்காக நேற்று அதிகாலை 4 மணிக்கு புது சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்ததாகவும், ஆனால், அங்கு மருத்துவர்கள் இல்லாமல் செல்போன் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டதால், குழந்தை  இறந்து பிறந்ததாகவும் கூறியுள்ளார். ஜெபராஜின் மனைவி ஜெஸ்ஸி ஜெனிபருக்கு காலை 11:15 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பரிதாபமாக குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. 

மேலும் படிக்க | கர்ப்பப்பையில் இருந்த 6 கிலோ கட்டி அகற்றம்... நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய அமைச்சர் 

மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் இரண்டு பேர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். பிறந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பணிக்கு வராமல் செல்போன் மூலம் செவிலியர்கள் மருத்துவரிடம் பேசி பிரசவம் பார்த்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தை இறந்தற்கு காரணமான இரண்டு நர்சுகள் இரண்டு உதவியாளர்கள் மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்ட நிலையில், புதுச்சத்திரம் போலீசார் சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆசையாக பிரசவத்திற்கு வந்த இடத்தில், மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் செல்போன் மூலம் வந்த வழிகாட்டுதல்களில் பிரசவம் பார்க்க, பிறந்த குழந்தை இறந்து பிறந்த விஷயம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் படிக்க | அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த மருத்துவரால்  பரபரப்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News