தமிழகத்தில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு? ஆதரவு தெரிவித்த முக ஸ்டாலின்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என தேசிய தலைவர்களுக்கு அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Dec 5, 2024, 02:44 PM IST
    அனைத்து பின்னடைவு காலியிடங்களை நிரப்ப வேண்டும்.
    நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு வேண்டும்.
    தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை.
தமிழகத்தில் விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு? ஆதரவு தெரிவித்த முக ஸ்டாலின்! title=

அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மூன்றாவது மாநாடு அதன் ஒருங்கிணைப்பாளரும், திமுக MP, மூத்த வழக்கறிஞருமான P.வில்சன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, இந்த மாநாட்டை நடத்துவதற்கு உழைத்த திமுக எம்பி பி.வில்சனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சமூக நீதி முன்னெடுப்புகளிலும், அரசியல் செயல்பாடுகளிலும் ஆர்வம் மிக்கவர் என்று புகழாரம் சூட்டினார். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து தேசிய தலைவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். அனைத்து பின்னடைவு காலியிடங்களையும் நிரப்புதல், நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டில் 50 சதவிகித உச்சவரம்பை நீக்குதல், மாநிலங்கள் தங்கள் இடஒதுக்கீட்டுக் கொள்கையை வகுக்க அதிகாரம் அளிப்பது போன்றவையெல்லாம் தான் தொடர்ந்து பேசிவருவதாக குறிப்பிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மேலும் படிக்க | உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு.... விடியல் தெரியாது - ஸ்டாலின் தடாலடி!

மேலும் நாடு முழுவதும் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் முயற்சிதான் அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு தொடர்பான முதல் திருத்தத்துக்கு பிரதமராக இருந்த நேருவை ஊக்குவிக்க காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என தேசிய தலைவர்களுக்கு அழைப்புவிடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்,  எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கான ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாநாட்டில் உரையாற்றிய ஒருங்கிணைப்பாளரும் திமுக எம்.பி.-யுமான பி.வில்சன், சாதிகள் பற்றிய விரிவான தரவுகள் இல்லாதது நாட்டில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினருக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் தடையாக உள்ளதாகவும்,  செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டில் உள்ள இந்த காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது கடினமானது அல்ல என தெரிவித்தார். CPI-ML சார்பில் பேசிய திபாங்கர் பட்டாச்சார்யா, பெண்களுக்கு அதிகாரமளித்தல், இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய விரிவான சமூக நீதியுடன் சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என கூறினார்.

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், சாதி, மதம், மொழி, இடத்தின் பெயரால் இத்தனை ஆண்டுகளாக நாட்டைப் பிரித்தவர் யார் என கேள்வி எழுப்பியதுடன், இதுவரை எந்த ஆர்எஸ்எஸ் தலைவரும் யாரும் தாழ்த்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரவில்லை என்றுன், எப்போதும் இந்துக்கள் பற்றி பேசுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், லேட்டரல் எண்ட்ரி மற்றும் அவுட்சோர்சிங் என்ற பெயரில் இட ஒதுக்கீடு முறியடிக்கப்படுவதாகவும், ஜாதிகளின் எண்ணிக்கை மற்றும் அமைப்பு தெரியாவிட்டால், நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்து, இடஒதுக்கீட்டை அதிகரிப்பது எப்படி என்று சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.-யான பி.எல். ஹரிபிரசாத் பேசுகையில், இடஒதுக்கீடு தகுதி மற்றும் செயல்திறனை சமரசம் செய்வதாக திட்டமிட்ட எதிர்மறை பிரச்சாரம் உள்ளதாகவும், அது உண்மையென்றால் 69% வழங்கும் தமிழ்நாடு மந்தமாக இருக்க வேண்டுமே என்றும், ஆனால், மனித வள மேம்பாடு மற்றும் சமூக வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். இடஒதுக்கீட்டிற்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் பாராட்டு தெரிவித்தார். பெரியார், நாராயண குரு, பசவண்ணா ரேவண்ணா, பூலே ஆகியோர் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை பாதுகாத்து வருகின்றனர் என்றும், இட ஒதுக்கீடு என்பது தொண்டோ, வறுமை ஒழிப்பு திட்டமோ அல்ல என்றும், அது சமத்துவத்தை உருவாக்குவதாக குறிப்பிட்டார்.

தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி எம்.பி. ஃபௌசியா தாசீன் ஷமத் கான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் போதெல்லாம் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, விரைவான பாதையில் செயல்படும் விரைவு நீதிமன்றங்கள் நமக்குத் தேவை என்றும், நீதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், அதானால் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் அவசியம் என்றும், அதை செய்ய விருப்பம் கொண்ட அரசு வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்பது பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனைகள் என குறிப்பிட்டார். இதுபோன்ற சமூக நீதி மாநாடு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடத்த வேண்டும் என்றும் ஆவலை வெளிப்படுத்தினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியபோது, திராவிட இயக்கம் மதச்சார்பின்மையை சமூக நீதியின் முக்கிய அம்சமாக வளர்த்தது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் மக்கள்தொகை பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கி, அதற்கேற்ப கொள்கைகளை உருவாக்கும் என குறிப்பிட்டார். சிபிஎம் பொலிட் பிரோ உறுப்பினரான பிருந்தா காரத் பேசியபோது, உச்ச நீதிமன்றத்தால் வைக்கப்பட்டுள்ள செயற்கையான மற்றும் தன்னிச்சையான 50% வரம்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்திவருவதாக தெரிவித்தார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த ஆயிரக்கணக்கான சமாஜ்வாதி கட்சியினர் போராடி சிறை சென்றதை குறிப்பிட்டு அனைவருக்கும் எல்லாம் என்ற இலக்கை அடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தங்கள் கட்சி கைகோர்த்து போராடும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | மது கொண்டாட்டத்தில் விபரீதம்.. உயிர் நண்பன் என்றும் பாராமல்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News