Ki.Ra: எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 18, 2021, 11:56 AM IST
  • கி.ரா. உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
  • சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன்,
  • புதுச்சேரியில் நேற்று இரவு காலமானார்
Ki.Ra: எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு title=

சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், புதுச்சேரியில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 98. 

உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.  வயது மூப்பின் காரணமாகவே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் கி.ரா எனப்படும் கி.ராஜநாராயணன்.

Also Read | Ki.Ra: கரிசல் பூமியின் அடையாளம்; முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார்

காலத்தின் காற்று ஆலமரத்தையும் விட்டு வைப்பதில்லை என்பதை உணர்த்தும் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள மனம் மறுப்பதாக பலரும் தங்கள் ஆதங்கங்களை பதிவிட்டு வருகின்றானர்.

கரிசல் பூமியின் அடையாளம் கி.ரா எனும் கி.ராஜநாரயணன் 98 வயதில் இயற்கை எய்தினார்.  தமிழின் தனிப் பெரும் வளத்தை காலம் கரைத்து விட்டது. கரிசல் குயில் தன் கானத்தை நிறுத்திக்கொண்டது. மண்ணின் மனம் கமழ்ந்த தென்றல் காற்றின் பரிசம் எங்கே என்ற ஏக்க பெருமூச்சே தமிழ் நெஞ்சங்களுக்கு மிச்சமாகிறது.
 
மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடம் ஒதுங்கியவன் என்று தன்னைப் பற்றி சொல்லிய கி.ரா,  பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன் என்று சொல்பவர். ஆனால், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றினார் என்பது, தமிழ் அவரது உயிரில் கலந்தது என்பதை உணர்த்தப் போதுமானது.

Also Read | Coronavirus Updates 18 May 2021: கடந்த 24 மணி நேரத்தில் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

பேசிக் கொண்டிருக்கும்போதே புராணங்களையும் காலத்தின் முன்னும், பின்னும் சென்று ஆராயும் நுட்பம் தான் கி.ராவின் சிறப்பு என்று கூறலாம். அதை அவர் கதை சொல்லும் நுட்பத்தில் மட்டும் பயன்படுத்தவில்லை. வாழ்க்கையின் இறுதிக்காலம் வரை நடைமுறைபப்டுத்தினார் என்பதற்கு ஒரே ஒரு உதாராணம் போதும்.  

கடந்த ஆண்டு, "அண்டரண்டப்பட்சி" என்ற பெண்களைப் பற்றிய புத்தகத்தை தன் கைப்பட எழுதினார் கி.ரா. அண்டரண்டப்பட்சியை வாசகர்கள் கைப்பிரதியாகவே படிக்க வேண்டும், அச்சிட வேண்டாம் என ஆசைப்பட்டார். இப்படி தனது இறுதிக் காலம் வரை தமிழையே சுவாசித்த கி.ராவின் இழப்பு, இனிமேல் தமிழில் வெற்றிடமாகவே இருக்கும்…

Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News