கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 50,000 இழப்பீடு: தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த 36,220 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 9, 2021, 02:10 PM IST
கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 50,000 இழப்பீடு: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து 36 ஆயிரத்து 220 பேர் பலியாகியுள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி  தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கும் மேல்  கடந்து விட்ட நிலையில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு விதிகளின் படி உரிய இழப்பீட்டை வழ்ங்கக் கோரி விஜயகோபால் என்பவர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்குவது தொடர்பாக வகுக்கப்பட்ட விதிகளின்படி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுதார்ர தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு எவ்வளவு இழப்பீடு வழங்க உள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.

ALSO READ |  இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டாதீர்கள், கொந்தளித்த எடப்பாடி

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவது என பல மாநிலங்கள் ஏற்றுக் கொண்டதாகவும், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து 36 ஆயிரத்து 220 பேர் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிற மாநிலங்களில் கூடுதல் இழப்பீடு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கூடுதலாக இழப்பீடு வழங்க எந்த தடையும் இல்லை எனவும், கூடுதல் எவ்வளவு வழங்குவது என்பது குறித்து அடுத்த வாரம் தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும் நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 27,09,921 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,226 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ | TN Covid Update Nov 08: அடைமழைக்கு நடுவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News