சென்னை மெட்ரோ ரயிலில் டோக்கனுக்கு பதில் டிக்கெட்

கொரோனா பரவலை தடுக்க ஒருவர் பயன்படுத்திய அதே டோக்கனை மற்றவர் பயன்படுத்தாத வண்ணம் அம்முறை ரத்து செய்யப்படுகிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 25, 2021, 08:32 AM IST
சென்னை மெட்ரோ ரயிலில் டோக்கனுக்கு பதில் டிக்கெட்

சென்னை மெட்ரோ சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இதில் முதற்கட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் சேவையினை வழங்குகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), இந்தியாவின் சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு விரைவான போக்குவரத்து அமைப்பு ஆகும். இந்த திட்டத்தின் முதல் பகுதியளவில் திறந்த பின்னர், 2015 ஆம் ஆண்டில் கணினி முறைமை வருவாயைத் தொடங்கியது. இதில் 54.1 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு வண்ண வழித்தடங்கள் உள்ளன. அதன்படி தினசரி சென்னையில் மெட்ரோ ரயில் (Chennai Metro Rail) சேவையை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இந்த மெட்ரோ சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 லட்சம் வரையில் காணப்படும்.

ALSO READ | மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும்

கடந்த 2019 ஆம் முதல் தொடரப்பட்ட கொரோனா (CoronaVirus) பரவலை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக்கால் ஆன டோக்கன்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். டோக்கன்களை அதற்குரிய உள்நுழையும் இயந்திரத்தில் காண்பித்தால் மட்டுமே பயணிகள் மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் செல்ல முடியும். 

அதன்படி டோக்கன் நடைமுறையை மாற்றி க்யூ-ஆர் கோடு பொறிக்கப்பட்ட காகித டிக்கெட் நடைமுறையை கொண்டுவர மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் இதனை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Chennai Metro முக்கிய செய்தி: இந்த நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News