இன்று தமிழகத்தில் கொரோனா நிலவரம்: பாதிப்பு- 5,835; மரணம் -119

இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் 5,835 பேர் மற்றும் இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆகும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 13, 2020, 06:33 PM IST
இன்று தமிழகத்தில் கொரோனா நிலவரம்: பாதிப்பு- 5,835; மரணம் -119 title=

சென்னை: இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் 5,835 பேர் மற்றும் இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆகும். இதன் அடிப்படையில் மாநிலத்தில் கொரோனா (Coronavirus) நோய்தொற்றின் மொத்த எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்தது. அதேபோல இறந்தவர்களின் எண்ணிக்கை 5,397 ஆக அதிகரித்தது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. அதேபோல தமிழகத்தில் இன்று  ஒரே நாளில் 5,146 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் இதுவரை 81.62% பேர் குணமாகி உள்ளனர். 

இன்றைய நிலவரம்: 2020 ஆகஸ்ட் 13
இன்று எண்ணிக்கை- 5835
சென்னை - 989
மரணம் - 119
வெளியேற்றம் - 5146
சோதனை எண் - 67,275

மொத்தம் நிலவரம்: 
செயலில் உள்ளவர்கள் - 53,499
நேர்மறை எண்ணிக்கை - 3,20,355
சென்னை பாதிப்பு - 1,13,058
இறப்பு எண்ணிக்கை - 5,397
வெளியேற்றம் - 2,61,459
சோதனை எண் - 34,99,300

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61252 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க கொரோனா காரணமாக 20,785,792 பேர் பாதிப்பு. 13,681,590 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து விடுப்பட்டுள்ளனர். 

No description available.

Image

Trending News