கொரோனா தொற்று சென்னை தொடர்ந்து முதலிடம்; 2வது இடத்தில் கோவை; மற்ற மாவட்டங்கள் நிலவரம்?

இன்று ஒரே நாளில் சென்னையில் 39 பேருக்கு கொரோனா உறுதிப் படுத்தப்பட்டதால் மொத்தம் எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 7, 2020, 08:25 PM IST
கொரோனா தொற்று சென்னை தொடர்ந்து முதலிடம்; 2வது இடத்தில் கோவை; மற்ற மாவட்டங்கள் நிலவரம்? title=

சென்னை: நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் இந்த நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அரசு நிர்வாகம், காவல் துறை, சுகதரத்துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் என அனைத்து துறையும் நேரம் காலம் இல்லாமல் மக்கள் நலனில் அக்கறைக்காட்டி வருகிறது. 

இந்த நோய் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இன்றுடன் இரண்டு வாரம் முடிவடைய உள்ளது. இன்னும் ஒருவாரம் லாக்-டவுன் காலம் உள்ளது. அதன் பிறகு இந்த உத்தரவு நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்தும் இன்னும் மத்திய, மாநில அரசுக்கள் தெளிவுப்படுத்தவில்லை.

தமிழகத்தை பொறுத்த வரை, நாளுக்கு நாள் நோயின் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் மாநிலத்தில் 69 பேருக்கு புதிதாக COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் அதிக கொரோனா பாதிப்பு சென்னையில் தான் பதிவாகி உள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 39 பேருக்கு கொரோனா உறுதிப் படுத்தப்பட்டதால் மொத்தம் எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது. சென்னை அடுத்தபடியாக ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 13 பேருக்கு தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அதிக கொரோனா பாதித்த பட்டியலில் சென்னை தான் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இன்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 60 ஆக உள்ளது.
 
தமிழ் நாட்டில் மொத்த பாதிப்பு 690. அதில் குணமடைந்தவர்கள் 19 பேர். இதுவரை உயிரிழந்தவர்கள் 7 பேர் ஆவார்கள்.

 

Trending News