ஒற்றைத் தலைமைதான் வேண்டுமென்று இபிஎஸ் நிற்க, இரட்டை தலைமையே தொடரலாம் என்று ஓபிஎஸ் முறுக்கினார். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி செவி மடுப்பதாக இல்லை.
இதனையடுத்து கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் புதிதாக எந்த முடிவுகளையும் எடுக்கக்கூடாது என கூறி பொதுக்குழுவுக்கு உத்தரவிட்டது.
இந்தச் சூழலில், கடந்த 23ஆம் தேதி வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார். மேலும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்பார்க்காத ஓபிஎஸ் தரப்பு என்ன செய்யலாம் என்று யோசித்திருந்த நேரத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்த சண்முக, எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
அதுமட்டுமின்றி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்பதால், அவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பும் செல்லாது.
எனவே ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென கோரி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, “ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்ப முடியாது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவு ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு மட்டும்தான் பொருந்தும்.
மேலும் படிக்க | பொறுப்பு வழங்கியதற்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின் உருக்கம்
ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தை பொறுத்தவரை நீதிமன்றம் தலையிட முடியாது. ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவில் நடந்த நிகழ்வுகளை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 7ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR