பொறுப்பு வழங்கியதற்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து திமுக தலைவருக்கு உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 4, 2022, 03:22 PM IST
  • திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு
  • இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கியதற்காக திமுக தலைவருக்கு நன்றி
 பொறுப்பு வழங்கியதற்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின் உருக்கம் title=

ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் சினிமாக்களை தயாரித்தும், வெளியிட்டும்வருபவர் உதயநிதி ஸ்டாலின். பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்ததால் உதயநிதியின் அரசியல் எண்ட்ரி எப்போது என்றே திமுகவினரின் கேள்வி இருந்தது.

அவர்களது கேள்விக்கு பதில் கிடைக்கும் விதமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2019) திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Udhayanidhyi Stalin

அதனையடுத்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் எம்.எல்.ஏவாகவும் தேர்வானார். இதற்கிடையே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் கட்சிக்குள் எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க | மகாராஷ்ட்ராவில் நடந்தது தமிழகத்திலும் நடக்கலாம் - எச்சரிக்கும் பாஜக!

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கியதற்கு அக்கட்சியின் தலைவருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருமையும்-கடமையும் நிறைந்த திமுக இளைஞரணி செயலாளராக மூன்றாண்டுகளை நிறைவு செய்து, இன்று 4ஆம் ஆண்டு பயணத்தை தொடங்குகிறேன். நம்பிக்கை வைத்து பெரும் பொறுப்பை வழங்கிய நம் அறிவாலயத்துக்கும், தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், பொதுச்செயலாளருக்கும், தலைமை-மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றி.

 

உடன் உழைக்கும் இளைஞரணியினர்-உடன்பிறப்புகள்-செல்லும் திசையெங்கும் தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து என்னிடம் அன்பு பாராட்டும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். சமூகநீதியை நிலைநிறுத்த, கழகத்தை வளர்த்தெடுக்க பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியர் வழியில் தொடர்ந்து உழைத்திடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News