தமிழக அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி. டெட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக வழக்கு பதிவிடப்பட்டது. விசாரணையில், தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டனர் என கூறி எத்தனை பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மருத்துவ கல்வி இயக்குனர் நியமனம் பற்றி நீதிமன்றம் உத்தரவுபடி முடிவு எடுக்கவில்லை என வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது.
இன்று அரசு அதிகாரிகளின் மீது சென்னை உச்சநீதிமன்ற மதுரை கிளை குற்றம்சாட்டியுள்ளது. ஒரு சில அரசு அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்காக எதையும் செய்ய தயாராக உள்ளனர் என்று தெரிவித்தது.
மேலும், தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் தொடர்பான அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கருத்துக்களை தெரிவித்துள்ளது. இந்த சர்ச்சையை தொடர்ந்து பிப்.,2-ம் தேதி இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.