காஞ்சிபுரம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சுமார் 900-க்கும் மேற்பட்ட தெருக்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு, அவற்றை பராமரிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆனால் மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்விளக்குப் பணிகள் முடிக்கப்படாமல் பாதியிலேயே உள்ளன. இதனால், அந்தந்த கம்பங்களின் மின்வயர்கள் வெளியில் தொடங்கவிடப்பட்டுக் கிடக்கும் நிலை இருந்து வருகிறது. இந்த வயர்களை அவ்வப்போது மாடுகள் கடித்து மின்சாரம் பாய்ந்து பலியாவது தொடர்கதையாகி உள்ளது. கால்நடைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பொதுமக்கள் சிலரும் இதனால் அச்சபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | சேற்றில் சிக்கிய பசு.! விவசாயி செய்த பாசப்போராட்டம்
மாநகராட்சி சார்பில் கிழக்கு ராஜவீதிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருக்கம்பத்தின் மின்வயர்கள் வெளியில் தெரிந்தவாறு இருந்துள்ளது. இந்நிலையில், கர்ப்பிணி பசு ஒன்று அந்த கம்பத்தின் மின் வயரில் வாய் வைத்த நிலையில், மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே துடித்து பரிதாபமாக இறந்தது. இதனை கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாட்டின் உரிமையாளர் விஜயகுமார் (எ) சேட்டு, வயிற்றில் குட்டியோடு இறந்த பசுவைப் பார்த்துக் கதறி அழுத காட்சி அனைவரையும் உலுக்கியது. சம்பவ இடத்திற்கு வந்த தெருமின் விளக்கு பராமரிப்பு ஊழியர்களிடம், மாட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி ஊழியர்களின் கவனக் குறைவால்தான் இத்தகைய வீபரிதம் நிகழ்ந்தாக கூறி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பிரச்சனை பெரிதாகும் சூழலில், சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி போலீசார், இது குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
மேலும் படிக்க | மின் அழுத்த கம்பியில் சிக்கி 8 கறவை மாடுகள் உயிரிழப்பு: புதுச்சேரியில் பரிதாபம்
இதே காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலைத் தெரு பகுதியில் தெருமின் விளக்கு வயர்களைக் கடித்து மின்சாரம் பாய்ந்து மாடு ஒன்று பலியாகும் பதபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள அனைத்து மின்கம்பங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வெளியில் தெரிந்தபடி இருக்கும் வயர்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR