வெளியில் தொங்கும் மின்சாரக் கம்பிகளால் பலியாகும் மாடுகள்.!

மாநகராட்சியின் அலட்சியத்தால் பலியான கர்ப்பிணிப் பசு  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 17, 2022, 11:30 AM IST
  • தொங்கிக் கொண்டிருந்த மின்வயரைக் கடித்து கர்ப்பிணிப் பசு பலி
  • அசம்பாவிதம் தடுக்க மின் இணைப்பு துண்டிப்பு
  • ’அப்போ, பசு பலியானது அசம்பாவிதம் இல்லையா?’ என சமூக ஆர்வலர்கள் கேள்வி
வெளியில் தொங்கும் மின்சாரக் கம்பிகளால் பலியாகும் மாடுகள்.! title=

மேய்ச்சலுக்காக புல்வெளிகளில் சுற்றிக்கொண்டிருக்கும் மாடுகள், இப்போதெல்லாம் அதிகளவில் சாலைகளின் நடுவிலேயே மேய்ச்சலுக்கு விடப்படுகிறது. உரிமையாளர்களின் அலட்சியத்தால் கால்நடைகள் சாலைகளிலும், தெருக்களிலும் தங்களுக்கான உணவைத் தேடி வரும் அவல நிலை இருந்து வருகிறது. சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் ஓரமாக மாடுகள் உறங்குவதும், ஓய்வெடுப்பதுமாக இருக்கிறது. இதனால், வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. 

மேலும் படிக்க | ‘மின்வேலி இருக்கு. பாத்து போங்க சாமீ’ - யானைகளுக்கு அறிவுறுத்திய விவசாய குடும்பத்தினர்!

இதுஒருபுறமென்றால், வீதிகளிலும், தெருக்களிலும் உலவும் மாடுகள் குப்பைத் தொட்டிகளில் கிடைக்கும் பொருட்களை உண்டு வருகின்றன. மனிதர்களின் அலட்சியத்தால் சில சமயம் பிளாஸ்டிக் நெகிழிகளை உண்டு இறந்துபோவதும், மின்சார வயர்களை கடித்து இறந்துபோவதும் என மாடுகளின் கதை துயர்மிகுந்ததாக உள்ளது. குறிப்பாக, மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின்விளக்குப் பணிகள் முடிக்கப்படாமல் பாதியிலேயே உள்ளதால், அந்தந்த கம்பங்களின் மின்வயர்கள் வெளியில் தொடங்கவிடப்பட்டுக் கிடக்கும் நிலை இருந்து வருகிறது. இந்த வயர்களை அவ்வப்போது மாடுகள் கடித்து மின்சாரம் பாய்ந்து பலியாவது தொடர்கதையாகி உள்ளது. கால்நடைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பொதுமக்கள் சிலரும் இதனால் அச்சபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | காஞ்சிபுரம் மாநகராட்சியின் அலட்சியம் - மாடுகளை காவு வாங்கும் மின்சாரம்.!

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வது வார்டு வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள உயர் மின் கோபுரத்தின் கீழே பூக்கள் கொட்டப்பட்டுக் கிடந்தது. இதனை பசு மாடு மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக உயர்மின் கோபுரத்தின் மின் இணைப்பு வயர் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. இதனை அந்த பசு மாடு கடித்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாட்டின் உரிமையாளர் பாலசுப்பிரமணியம், இறந்த பசு மாடு 6 மாதம் கருவுற்றிருப்பதாக தெரிவித்தார். 

இதனால் வேதனையடைந்த பொதுமக்கள், மின்துறை அலுவலகத்துக்குத் தகவல் அளித்தனர். உடனடியாக, உயர்மின் கோபுரத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்தப் பகுதி அதிகளவில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்குள் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனிதர்களுக்கு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. ‘அப்போ, கர்ப்பிணிப் பசு பரிதாபமாக பலியாகியது அசம்பாவிதம் இல்லையா ?’ என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.!  

மேலும் படிக்க | இறைச்சிக்காக மாடுகளைத் திருடிய கும்பல் கைது

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News