கணவன் நடத்தையில் சந்தேகம்; ஆணுறுப்பு மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி!

பாணாவரம் அருகே கணவன் நடத்தையில் சந்தேகமடைந்து பொங்கி எழுந்த மனைவி கொதிக்க கொதிக்க வெந்நீரை கணவனின் அந்தரங்க உறுப்பு மீது ஊற்றினார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 18, 2022, 10:33 AM IST
  • தங்கராஜ் கம்பெனியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக பிரியாவுக்கு தகவல் கிடைத்தது.
  • அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ரனர்.
  • தீக்காயங்களுடன் தங்கராஜ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
கணவன் நடத்தையில் சந்தேகம்; ஆணுறுப்பு மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய மனைவி!

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமம் திடீர் நகர் பகுதியை சோ்ந்தவர் தங்கராஜ்-32. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு பிரியா-27 என்ற‌ மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன இந்த நிலையில் தங்கராஜ் கம்பெனியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக பிரியாவுக்கு தகவல் வந்ததின் பேரில் கடந்த ஒரு மாத காலமாக இருவருக்கும் சண்டைகள் முற்றியுள்ளன.இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் கடுமையான முறையில் சண்டை ஏற்பட்டு அதில் இரவு தங்கராஜ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி பிரியா விடியற்காலையில் சூடாக கொதிக்கும் வெந்நீரை எடுத்துக் கொண்டு வந்து, அவரது ஆண் உறுப்பின் மீது ஊற்றி உள்ளார்.

இதில் வலி தாங்காமல் கதறிய அவரை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் 30 சதவீதம் வரை தீக்காயங்களுடன் தங்கராஜ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். தங்கராஜ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் படிக்க | மனைவியின் நினைவு நாளில் தற்கொலை செய்த கணவர்!

இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கணவின் மீது சந்தேகத்தின் பேரில் மனைவி கணவனின் ஆணுறுப்பு மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம்-ஐ உடைத்த ஆசாமி!

மேலும் படிக்க | கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை! சிறுவனுக்கு அடி உதை!

தொப்பூர் காவல் ஆய்வாளருக்கும் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு இது நானாக எடுத்துக் கொண்ட முடிவு என் மரணத்திற்கும் மற்ற யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் எழுதி வைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் காவல் ஆய்வாளர் யமுனாதேவி எஸ் பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்த மகேஸ்வரன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதிய கடிதங்களையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது? குழப்பத்தில் தமிழக - கேரளா வனத்துறையினர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News