Cuddalore Tamil Nadu Lok Sabha Election Result 2024: கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் க்ளீன் ஸ்வீப்?

Cuddalore Tamil Nadu Lok Sabha Election Result 2024: தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின் படி, கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 1 லட்சத்துக்கும் அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 4, 2024, 02:33 PM IST
  • கடலூர் தொகுதி மக்கள் யாருக்கு வாக்களித்துள்ளார்கள்?
  • கடலூர் தொகுதி மக்களின் பிரச்சனைகளை எடுத்துச்சொல்ல நாடாளுமன்றத்திற்கு செல்லப்போவது யார்?
  • கள நிலவரம் கூறுவது என்ன?
Cuddalore Tamil Nadu Lok Sabha Election Result 2024: கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் க்ளீன் ஸ்வீப்?  title=

Cuddalore Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024 மக்களவைத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி 102 தொகுதிகளில் நடந்தது. வாக்குப்பதிவு எண்ணிக்கை 66.14 சதவீதமாக இருந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி 89 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகின. மே 7ஆம் தேதி 94 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகின. 

சமீபத்திய புதுப்பிப்பு:

தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின் படி, கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 1 லட்சத்துக்கும் அதிகமாக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவர் 283046 வாக்குகள் எடுத்துள்ள நிலையில், தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 173133 வாக்குகளையும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சன் 131336 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

மே 13ஆம் தேதி நடைபெற்ற நான்காம் கட்டத் தேர்தலில் 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 69.16 சதவீத வாக்குகள் பதிவாகின. 6 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 49 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடந்த ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி நடைபெற்றது, இதில், 62.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆறாவது கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதி 58 மக்களவைத் தொகுதிகளில் நிறைவடைந்தது. இதன் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 63.36 சதவீதமாக இருந்தது. ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடந்தது. 57 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 59.5% வாக்குகள் பதிவாகின.

கடலூர் மக்களவைத் தொகுதி விவரம்

தமிழ் நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. பல்வேறு அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ் நாட்டின் கடலூர் தொகுதி பற்றிய முழுமையான விவரங்களை  இங்கே காணலாம். 

கடலூர் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் - திமுகவின் டிஆர் வி .எஸ். ரமேஷ்

கடலூரில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் - திட்டக்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, கடலூர்

கடலூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 14,12,746, இதில் ஆண் வாக்காளர்கள்-6,93,353, பெண் வாக்காளர்கள்- 7,19,178, மூன்றாம் பாலின வாக்காளர்கள்-215. 

கடலூர் தொகுதி 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் = 72.57% 

மேலும் படிக்க | EVM வாக்கு எண்ணிக்கை... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்..!!

கடலூர் தொகுதி 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்:

காங்கிரஸ் (இந்தியா கூட்டணி): எம்.கே.விஷ்ணுபிரசாத்

தேமுதிக (அதிமுக கூட்டணி): சிவக்கொழுந்து

பாமக (எண்டிஏ கூட்டணி): தங்கர் பச்சான்

நாம் தமிழர் கட்சி: மணிவாசகம்

கடலூர் தொகுதி கள நிலவரம் கூறுவது என்ன? 

இம்முறை கடலூரில் திமுக வேட்பாளருக்கும் பாமக வேட்பாளருக்கும் இடையில் கடுமையான போட்டி உள்ளதாக கூறப்படுகின்றது. மக்களிடையே இருவருக்கும் சமமான ஆதரவு இருப்பதாக எமது கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கடலூர் தொகுதி 2019 மக்களவைத் தேர்தல்

வெற்றி பெற்றவர் - டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் திமுக - பெற்ற வாக்குகள் - 522160

இரண்டாம் இடம் -இரா.கோவிந்தசாமி அதிமுக - பெற்ற வாக்குகள் - 378177

மூன்றாம் இடம் - தங்கவேல் அமமுக - பெற்ற வாக்குகள் - 44892 

மேலும் படிக்க | NDA vs INDIA: பிரதமரை தீர்மானிக்கும் 'இந்த 6 மாநிலங்கள்' - நாளைக்கு இதுதான் ரொம்ப முக்கியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News