தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை: நாளை தாக்கும் டவ்-தே புயல், எங்கு கரையை கடக்கும்?

அரேபிய கடலில் நாளை டவ்-தே புயல் உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகம் மற்றும் கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் இதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிகைகளையும் எடுத்து வருகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : May 14, 2021, 03:20 PM IST
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஒரு தீவிர புயலாக வலுப்பெறும்-வானிலை ஆய்வு மையம்.
  • தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழைக்கான வாய்ப்பு.
  • மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை: நாளை தாக்கும் டவ்-தே புயல், எங்கு கரையை கடக்கும்?

சென்னை: அரேபிய கடலில் தென்கிழக்கில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஒரு தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டவ்-தே புயலின் தீவிரம் எவ்வளவு இருக்கும்? இந்த புயல் எங்கே கரையை கடக்கும்? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

லட்சத்தீவுக்கு அருகிலுள்ள தென்கிழக்கு அரேபியக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுப்பெற்று நாளை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது அரேபிய கடலில் உருவாகியுள்ள இந்த புயல் (Cyclone) 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் உருவாகும் முதல் புயல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புயலின் தாக்கம் தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, லட்சத்தீவு ஆகிய இடங்களில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.  

தமிழகத்திலும் கனமழையையும் கடும் காற்றையும் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த புயல் கரையை கடக்கும் இடம் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் ஓமன் கடற்கரை அல்லது தெற்கு பாகிஸ்தான் பகுதியில் கரையை கடக்கு என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி இந்த இடங்களில் புயல் கரையை கடந்தால், இந்தியாவில் குஜராத்தின் சில பாகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் மீனவர்கள் (Fishermen) கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

ALSO READ: நாளை உருவாகிறது டவ்-தே புயல், தமிழகத்தில் அலர்ட்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரேபிய கடல் கடற்கரை, தெற்கு தமிழக கடற்கரையில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், மே 14-16 தேதிக்கு இடையில் அரேபிய கடலில் சூறாவளி உருவாகலாம் என்பதால், கடலில் உள்ளவர்கள் உடனடியாக அருகிலுள்ள துறைமுகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்குமாறு இந்திய கடலோர காவல்படை மீன்வளத்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

"14-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் 14, 15-ம் தேதிகளில் சூறாவளி காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று முன்னதாக எச்சரிக்கை விடப்பட்டது.

புயல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், பைபர் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் கேரளாவில் புயல் எச்சரிக்கை

அரேபிய கடலில் நாளை டவ்-தே புயல் உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகம் (Tamil Nadu) மற்றும் கேரளாவில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் இதை சமாளிப்பதற்கான அனைத்து நடவடிகைகளையும் எடுத்து வருகிறது. 

ALSO READ: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: புயலாக மாறலாம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மீனவர்களுக்கு எச்சரிக்கை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News