சென்னை: நுங்கம்பாக்கத்தில் 2 அரசு பேருந்துகள் மீது மரம் விழுந்தது. சென்னையில் மீட்பு பணியில் களமிறங்கியது ராணுவம். இதுவரை நான்கு பேர் பலி என தகவல். சென்னை விமான நிலையம் 9 மணி வரை மூடல். சென்னை வர்தா புயலின் சேதம் ரூ1,000 கோடியாக இருக்கலாம் எனத்தகவல் கிடைத்துள்ளது.
வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு நிலை வர்தா புயலாக உருவானது. இந்தப்புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாகவும் அதனால் வட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. நள்ளிரவு வரை புயலின் தாக்கம் வலுவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னைவாழ் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும், ஏற்கனவே வெளியே சென்றவர்கள் அருகாமையில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என தமிழக அரசு சார்பில் கேட்டு கொண்டுள்ளது.
வர்தா புயல் சென்னையை வேகமாக நெருங்கி வருவதால் பாதுகாப்பு கருதி 7357 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆந்திரா பகுதியிலிருந்து 9400 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வர்தா தற்போது சென்னையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் புயலின் மையப்புள்ளி உள்ளது. புயலின் மையைப் பகுதி கரையை கடக்கும்போது மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வரை காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க தொடங்கியது. இந்தப் புயல் இன்று மதியம், 2:00 மணி முதல் 5:00 மணி வரை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிற்பகல் மேல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதற்கு "வர்தா' என பெயரிடப்பட்டது.
வார்தா புயல் சென்னைக்கு கிழக்கே 20 கிமீ தொலைவில் மையம் கொண்டு உள்ளது. சென்னையை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வரும் புயல் கரையை கடக்க தொடங்கிவிட்டது. சென்னை அருகே வர்தா புயல் கரையை கடக்க தொடங்கிவிட்டதாக செயற்கைக்கோள் புகைப்படத் தகவல் தெரிவிக்கிறது. க
புயல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் குறைந்து காணப்படும். புயல் கரையை கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
4 மாவட்டங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். மக்கள், அரசு மற்றும் தேசிய பேரிடம் மீட்பு படையினர் அறிவுரைபடி செயல்பட்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.