சென்னை: பத்தாண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததாலையே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதாக தமிழ்நாடு மருத்துவ அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளா.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகான பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சட்டபேரவையில் விளக்கம் அளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் 105 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்படுள்ளதாகவும், கீழ் தளத்தில் அறுவை சிகிச்சைகான பொருட்கள் சேமிக்கும் கிடங்கு இருப்பதாகவும், முதல் தளத்தில் நரம்பியியல் துறையும், 2ம் தளத்தில் நெஞ்சக பிரிவும் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
அங்கு மொத்தம் 99 நோயளிகள் சிகிச்சை பெற்று வந்தாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யபட்டுள்ளதால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று சட்டபேரவையில் விளக்கம் அளித்தார் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன்.
மேலும் படிக்க: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து!
பேரவையில் தொடர்ந்து பேசிய அவர், கடந்த பத்து ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததாகவும், தீ அனைப்பு வீரர்கள் காவல்துறையினர் 3 மணி நேரம் போராடி உயிர் இழப்பு இல்லாமல் தீயை அணைத்து விட்டதாகவும் கூறினார். மேலும் அவர்களுக்கு பாராட்டுகளையும் அமைச்சர் தெரிவித்தார். வரும் நிதி ஆண்டில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீயால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தை அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
முன்னதாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வந்த தளத்தில் இன்று 11 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதாவது இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் திடீரென வெடி சத்தம் கேட்டது. வெடி சத்தத்தை தொடர்ந்து அந்த தளம் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது. அப்பகுதி புகைமண்டலமாகக் காட்சியளித்தது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்புப் படையினர், மருத்துவமனை வளாகத்துக்குள் சிக்கிக் கொண்ட நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் மற்றும் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணி மேற்கொண்டார். தற்போது தீ விபத்து முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Thanjavur Temple Chariot: உயிரிழந்தவருக்கு பேரவையில் இரங்கல்; 2 நிமிட மௌன அஞ்சலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR