கொரோனா தொற்றால் இதுவரை திரையுலகம் பல கலைஞர்களை இழந்துள்ளது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு கலைஞரை திரையுலகம் இழந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடன பயிற்சியாளராக பணியாற்றியவர் மாஸ்டர் சிவசங்கர் பாபா. இவர் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், ஆபத்தான நிலையில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டார். இவர் மட்டுமல்லாது இவரது மகன் மற்றும் மனைவிக்கும் கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரின் நுரையீரல் கொரோனாவால் 75% பாதிப்பு அடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் எவ்வளவு சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவு அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ நன்றி முதல்வரே! விட்ராதீங்க முதல்வரே! இயக்குனர் பேரரசு நெகிழ்ச்சி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR