பழனி முருகன் கோவில் கருவறையை செல்போனில் படம் பிடித்த சம்பவத்தினால் பக்தர்கள் அதிர்ச்சி!

பழனி முருகன் கோவில் கருவறையை பக்தர்‌ ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 31, 2023, 02:18 PM IST
  • கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது தைப் பூசத் திருவிழா தொடங்கியுள்ளது.
  • பழனி கோவில் கருவறையை பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவுசெய்துள்ளார்.
  • பழனி கோவில் கருவறையை செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என்று விதிமுறை உள்ளது.
பழனி முருகன் கோவில் கருவறையை செல்போனில் படம் பிடித்த சம்பவத்தினால் பக்தர்கள் அதிர்ச்சி! title=

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது தை பூச திருவிழா தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இந்நிலையில் பழனி கோவில் கருவறையை பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவுசெய்து‌ தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில் பழனி முருகன் கோவில் கருவறையில் உள்ள நவபாஷாண முருகன் சிலையும் தெரிகிறது. இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பழனி கோவில் கருவறையை செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என்று விதி இருந்தும் சில பக்தர்கள் விதிகளைமீறி திருக்கோவில் கருவறையை படம் பிடித்துள்ளனர். 

மேலும் படிக்க | பழனி கும்பாபிஷேகத்தில் பழனி ஆதீனம் புலிப்பாணி சித்தர் புறக்கணிப்பதாக அறிவிப்பு!

ஏற்கனவே கும்பாபிஷேகத்தின்‌ போது ஆகமவிதிகள் மீறப்பட்டிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி பக்தர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், தற்போது கருவறையில் உள்ள முருகன் சிலையை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியிருப்பது, பக்தர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்ல உயர்ந்திமன்றம் தடைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் உடனடியாக திருக்கோவில்‌ நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்‌ கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | 20 நாட்களில் ரூ.3.80 கோடியை தாண்டிய பழனி கோயில் காணிக்கை வரவு!

முன்னதாக, பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை செய்த போகர் சித்தரின் சீடரான புலிப்பாணி சுவாமிகளின் கருவழி வந்த வாரிசுகளான, தற்போதைய ஆதினமான புலிப்பாணி பாத்திர சுவாமிகளின் பெயரை அழைப்பிதழில் போடாமல் அவமரியாதை செய்த திருக்கோவில் நிர்வாகத்தை கண்டித்து, பழனி மலை கோவிலுக்கு உரிமை பெற்ற புலிப்பாணி ஆதீனம், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆதீனம் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தைப்பூச தேர்த்திருவிழா! 51 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப தேர் நிகழ்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News