வேட்பாளரை அவதூறாக பேசியதாக செல்லூர் ராஜூ மிது புகார்!

திமுக கூட்டணியில் இருந்து போட்டியிடும் மதுரை வேட்பாளரை அவதூறாக பேசியாக அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Mar 27, 2019, 06:22 PM IST
வேட்பாளரை அவதூறாக பேசியதாக செல்லூர் ராஜூ மிது புகார்! title=

திமுக கூட்டணியில் இருந்து போட்டியிடும் மதுரை வேட்பாளரை அவதூறாக பேசியாக அமைச்சர் செல்லூர் ராஜூ மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது!

தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசனை அவதூறாக பேசியதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் அலுவலரிடம் திமுக கூட்டணி கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

முன்னதாக மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் நாடாளுமன்ற வேட்பாளரின் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நிகழ்ச்சிக்கு பின்னர் பொதுமக்களிடம் பேசினார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனிக்கொள்கை இருக்கிறதா? என்ன திறமை இருக்கிறது? எங்கள் தோளில் அல்லது திமுக தோளில் இடம் பிடிப்பது தான்  இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்து வந்துள்ள வேலை.

மதுரை பற்றிய மிக மிக அருமையாக எழுதிய வெங்கடேஷன் அவர்களின் கட்டுரைகளை நான் படித்திருக்கின்றேன். தமிழ் அறிந்த ஓர் அறிஞரை திமுக-விற்கு காவு கொடுத்து விட்டீர்கள். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், திமுக-வும் கொள்கை அடிப்படையில்  கூட்டணி வைத்துள்ளார்களா? கலைஞர் பற்றியும் ஸ்டாலினை பற்றியும் நாங்கள் பேசியதை விட மேடை அமைத்து கேவலம் கேவலமாக பேசியவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் தான்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பயில்வானாக இருக்கும்போதே நாங்கள் அவர்களுடன் பணியாற்றியுள்ளோம், தற்போது நோஞ்சானாகிவிட்டது. தற்போது அக்கட்சியில் ஒன்று அல்லது இரண்டு தலைவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களிடம் வெங்கடேஷ் போய் சிக்கிக் கொண்டார் என்பது வருத்தத்திற்குறிய விஷயம்தான்? என தெரிவித்தார். 

மேலும் அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வல்லமை படைத்த ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி தான் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். இந்நிலையில் தேர்தல் பிரதச்சாரத்தின் போது தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளரை செல்லூர் ராஜூ அவதூறாக பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Trending News