மதுரையை கைவசப்படுத்திய திமுக! தடம்பதித்த பாஜக!

Madurai Corporation Election 2022: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2022, 02:06 PM IST
மதுரையை கைவசப்படுத்திய திமுக! தடம்பதித்த பாஜக! title=

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.  மதுரையில் ஒரு மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  மதுரை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 100 வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  தேர்தலில் 53.99 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.  இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

er

மேலும் படிக்க | முதல் முறையாக எதிர்கட்சி உறுப்பினர் இல்லாத மன்றமாக மாறிய சின்னாளப்பட்டி பேரூராட்சி

அதன்படி காலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்பு மின்னணு வாக்கியங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மதுரையில் திமுக முன்னிலை பெற்று வந்தது.  இந்நிலையில் மதுரை மாநகராட்சி திமுக கைப்பற்றியுள்ளது. மேலூர் நகராட்சி 8வது வார்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.  தேர்தல் நடைபெற்ற பூத்தில் பாஜக ஹிஜாப் சர்ச்சையை கிளப்பியது.  இந்நிலையில் அந்த வார்டில் பாஜக வேட்பாளர் 10 ஓட்டுகளை மற்றும் பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.  திமுக வேட்பாளர் முகமது யாசின் 651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  

அதிமுகவிடம் இருந்து விலகி இந்த தேர்தலில் தனியாக போட்டியிட்ட பாஜகவிற்கு மதுரையில் வெற்றி கிடைத்துள்ளது.  86வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட பூமா ஜனாஶ்ரீ வெற்றி பெற்றுள்ளார்.

bjp

மேலும் கரூர், நெல்லை ஆகிய இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய நகராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. நெல்லை மாநகராட்சியை திமுக கைப்பற்றுகிறது. மொத்தமுள்ள 55 வார்டுகளில் 22ல் திமுகவும், 2 வார்டுகளில் அதிமுகவும்,  மதிமுக - 1, சுயேட்சை - 1 வார்டுகளில்  வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்க | சுயேச்சைகளின் கையில் கமுதி பேரூராட்சி 15ல் 14 வார்டுகளில் வெற்றி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News