இந்தி திணிப்புக்கு எதிராக களம் இறங்கும் திமுக; கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில், "இந்தி திணிப்பை எதிர்த்து வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 16, 2019, 07:26 PM IST
இந்தி திணிப்புக்கு எதிராக களம் இறங்கும் திமுக; கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு title=

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில், "இந்தி திணிப்பை எதிர்த்து வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிக மக்களால் பரவலாக பேசப்படும் "இந்தி" தான் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்கக்கூடிய மொழி என்ற கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "இந்தி தான் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உகந்த மொழி என அமித்ஷா அவர்கள் கூறியுள்ள கருத்தை திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இது இந்தியா. ‘இந்தி’யா அல்ல என எச்சரிக்கும், அதேவேளையில் பிரதமர் மோடி அவர்கள் இதுகுறித்த தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தநிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Trending News