அண்ணாமலை குற்றச்சாட்டுகளை பார்த்தால் சிரிப்புதான் வருது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

DMK RS Bharathi Attack On BJP Annamalai: அண்ணாமலையை பார்த்தால் சிரிப்புதான் வருது! அவருக்கு உண்மையை சொல்லும் பழக்கம் இல்லை. அவர் எப்படி ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தார் என திமுக ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 14, 2023, 02:42 PM IST
  • இன்று அண்ணாமலை குற்றச்சாட்டுகளை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது -ஆர்.எஸ்.பாரதி.
  • அண்ணாமலை குற்றச்சாட்டு ஆதாரம் இல்லை. உண்மையை சொல்லும் பழக்கமும் இல்லை -ஆர்.எஸ்.பாரதி.
  • திமுக மடியில் பயமில்லை. நாங்கள் எதற்கும் பயந்தவர்கள் இல்லை -திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி.
அண்ணாமலை குற்றச்சாட்டுகளை பார்த்தால் சிரிப்புதான் வருது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் title=

DMK Vs BJP: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதைக் குறித்து பார்ப்போம்.

அண்ணாமலை குற்றச்சாட்டுகளை பார்த்தால் சிரிப்புதான் வருது:
பொன்னான நேரத்தை வீணடிக்கும் வகையில் காலையில் ஒரு நாடகம் அரங்கேறியதாகவும், அண்ணாமலை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் கொடுத்த ஊழல் குற்றச்சாட்டுக்கு சட்டமன்றத்தில் பதில் அளிக்கும் முன் அந்த குற்றச்சாட்டுகளை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன் என கலைஞர் தெரிவித்தார் என்று கூறிய அவர், பொதுவாக நான் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பார்ப்பேன். அதில் உள்ள நகைச்சுவையை பார்த்து சிரிப்பேன். அதுபோலத்தான் இன்று அண்ணாமலை குற்றச்சாட்டுகளை பார்த்தால் சிரிப்புதான் வருவதாகவும், அவர் எப்படி ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தார் என தோன்றுகிறது என விமர்சனம் செய்தார்.

உண்மையை சொல்லும் பழக்கம் அண்ணாமலைக்கு இல்லை:
மேலும் பேசிய அவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ள 17 நபர்களும் தேர்தலில் போட்டியிட்டு உள்ளனர். தேர்தலுக்கு முன் தங்கள் சொத்து விவரங்களை பதிவு செய்துள்ளனர். எனவே இதில் தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கலாம். அண்ணாமலை இன்று ஒருவர் மீது ஊழல் குற்றாட்டை வைக்கவில்லை என்றும், ஆற்காடு வீராசாமி இறந்து விட்டார் என அண்ணாமலை கூறினார். அதுபோலத்தான் அவர் வைக்கும் குற்றச்சாட்டு எதற்கும் ஆதாரம் இல்லை உண்மையை சொல்லும் பழக்கம் அண்ணாமலைக்கு இல்லை எனவும் கூறினார்.

சீட்டிங் அண்ணாமலை:
சமந்தப்பட்ட நபர்கள் அவர் மீது புகார் அளிப்பார்கள் சம்மந்தம் இல்லாத நபர்கள் சொத்துக்களை எல்லாம் சேர்த்துள்ளார் என்று பேசிய ஆர்.எஸ்.பாரதி, சம்பந்தப்பட்டவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலை தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டார் நீதிமன்றங்களுக்கு செல்லத்தான் நேரம் அதிகமாக இருக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். அண்ணாமலை ரஃபேல் வாட்ச் பில் கொடுக்காமல் ஏதோ ஒரு சீட்டை காட்டி சீட்டிங் செய்துள்ளதாகவும், அவர் சீட்டிங் அண்ணாமலை.. திமுக திறந்த புத்தகம் என்றார். இது போன்று பல சாவல்களை சந்தித்து உள்ளோம். 

மேலும் படிக்க: ’என்னை மாத்தனும்மா மோடிகிட்ட போங்க’ சொந்த கட்சிக்காரர்களை சாடிய அண்ணாமலை

அண்ணாமலை மேதை கிடையாது:
எம்.ஜி.ஆர் காலத்தில் கூட ஊழல் வழக்கு போட முடிந்தது. ஆனால் நிரூபிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வை விட அண்ணாமலை மேதை இல்லை என்றும் சாடினார்.

அண்ணாமலைக்கு சவால் விட ஆர்.எஸ்.பாரதி:
அனைவரின் சொத்து மதிப்புகளிலும் ஒரு ஜீரோ சேர்த்துள்ளார். இதற்கு எல்லாம் நடவடிக்கை எடுக்கும் இலாக்க மோடியிடம் உள்ளதாகவும், அவர் எங்களை குற்றம்சாட்டி உள்ளாரா? இல்லை பதவியில் இருந்து நீக்க உள்ளதால், அவர்கள் மீது குற்றம்சாட்டி உள்ளாரா என தெரியவில்லை என்றார். திமுகவிற்கு சொந்தமாக 1408 கோடி அளவில் சொத்து உள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த சொத்து விவரங்களை 15 நாட்களில் அண்ணா அறிவாலயத்தில் வழங்க வேண்டும் என அமைப்பு செயலாளர் என்ற முறையில் சவால் விட்ட அவர், 1408 கோடி ரூபாய்க்கான பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் திமுகவுக்கு சொந்தமான பள்ளிகள் 3408 கோடிக்கு உள்ளது என தெரிவிக்கும் அவர், அந்த பள்ளிகள் எங்கு உள்ளது என்றும் தெரிவிக்க வேண்டும். 15 நாட்களில் இதுகுறித்த விவரங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், அண்ணாமலை அவர் நடத்தியது ஒரு நாடகம் எனக் கூறினார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பற்றி எரிகிறது:
பாராளுமன்றம் முடங்கி உள்ளது, காரணம்.. உலக நாடுகள் காரி துப்பும் அளவிற்கு அதானி 10 லட்சம் கோடி அளவில் ஊழல் செய்துள்ளார் எனத்தெரியவந்தது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என இரண்டு அவைகளிலும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவை நடைபெறவில்லை. இந்த விவகாரம் இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பற்றி எரிந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

மேலும் படிக்க: முதல் சீரிஸில் திமுக.. அடுத்த சீரிஸில் அதிமுக - அண்ணாமலை போட்ட குண்டு

ரூ. 84 கோடி மோசடி.. நாடகத்தை நடத்தும் அண்ணாமலை:
தமிழக மக்கள் ஆருத்ரா நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துவிட்டு வயிற்று எரிச்சலுடன் உள்ளனர். 84 கோடி ரூபாய் வரை அண்ணாமலை மற்றும் அவர் சகாக்கள் பெற்றுள்ளனர் என குற்றச்சாட்டு உள்ளதால்தான் பொதுமக்கள் கமலாலயத்தை முற்றுகையிட்டதாகவும் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் உள்ள குற்றச்சாட்டை திசை திருப்ப இந்த நாடகத்தை நடத்தி உள்ளார். திமுக மடியில் பயமில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

அவர் அண்ணாமலை இல்லை மக்குமலை: 
தொடர்ந்து பேசிய அண்ணாமலை தனக்கு இடம் எதுவம் சொந்தம் இல்லை என்று சொல்கிறார். அண்ணாமலைக்கு அவர் மூளை கூட அவருக்கு சொந்தம் இல்லையா என்று பொதுமக்கள் கேட்பதாகவும் அண்ணாமலைக்கு பொதுமக்கள் மக்குமலை என பெயர் வைத்து உள்ளதாகவும், இந்த மக்கு போல உள்ள இவர், தலைவராக இருந்தால் மட்டுமே எங்களுக்கு நல்லது, எனவே அவரை மாற்றம் செய்ய கூடாது என தேசிய பாஜகவிற்கு கோரிக்கை வைத்தார். 

மேலும் படிக்க: அண்ணாமலை வெளியிட்ட ரஃபேல் வாட்சு பில் - யார் இந்த கோவை சேரலாதன்?

பாஜகவிடம் பயப்பட நாங்கள் நாங்கள் அதிமுக கிடையாது:
திமுகவை பொறுத்தவரை நாங்கள் எதற்கும் பயந்தவர்கள் இல்லை, இன்று ஸ்டாலின் தேசிய தலைவராக மாறி உள்ளதாகவும், அண்ணாமலை எண்ணம் நிறைவேறாது என்று பேசிய அவர் ஆருத்ரா வழக்கில் நிச்சயம் அவர் உள்ளே செல்ல உள்ளார். இதை நான் கூறவில்லை அந்த கட்சியில் இருந்து வந்தவர்கள் இதை தெரிவித்து உள்ளார் என்றும் கூறினார். சி.பி.ஐ யை கண்டு நாங்கள் பயப்படவில்லை. சி.பி.ஐ அவர்கள் கையில் உள்ளது. அதை வைத்து அவர் பயம் புறுத்த பார்த்தால் நாங்கள் பயப்படு மாட்டோம் என்றும், சிபிஐ பதிவு செய்த எத்தனை வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது என கேள்வி எழுப்பினார். அண்ணாமலை திமுக மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு நிச்சயம் வழக்கு பதிவு செய்வோம். மற்ற நபர்கள் அவர்கள் குற்றச்சாட்டு குறித்து பதில் அளிப்பார்கள் என கூறிய அவர், 2014 ஆம் ஆண்டு முதல் அவர்கள் ஆட்சி உள்ளது. தவறு நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும், அவர்களிடம் பயப்பட நாங்கள் எடப்பாடி, வேலுமணி கிடையாது. நாங்கள் கண்டிப்பாக வழக்கு தொடர்வோம் எனக் கூறினார். 

பயத்தில் ஆட்டம் போடுகிறார் அண்ணாமலை:
ஆருத்ராவுக்கு பயந்து ஆட்டம் போடுகிறார். அந்த வழக்கில் அண்ணாமலை சிறைக்கு செல்ல உள்ளதாகவும், வழக்கு தொடர்வதில் மிக உறுதியாக இருப்பதாக கூறிய அவர், காவிரி மருத்துவமனை எங்களுக்கு சொந்தம் என்று சொல்கிறார். நல்ல வேலை காவேரி பகுதியே எங்களுக்கு சொந்தம் என்று சொல்லவில்லை என்று சிரித்தபடியே பேசி ஆர் எஸ் பாரதி, அதிமுகவிடம் டீல் பேசுவதற்காகதான் அதிமுக குறித்து குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வெளியிட்டுள்ளதாகவும், நான் கொடுத்த விளக்கம் போதும்.. முதல்வர் விளக்கம் எதற்கு கொடுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், பொதுமக்களுக்கு பில் காமிக்காமல் அண்ணாமலை ஏமாற்றி உள்ளதாகவும் அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லவில்லை எவ்வளவு சொத்து உள்ளது என்று தான் சொல்லி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: அண்ணாமலை வெளியிடப்போவது திமுக முக்கிய புள்ளிகளின் ஊழல் பட்டியலா? சொத்து பட்டியலா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News