தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்காக மிகப் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திடலின் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கம்பீர முகம்கள் பொறித்த மலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர் சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் மாநாட்டுக்கு சனிக்கிழமை மாலையே வருகை தந்தனர். அப்போது அங்கு வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டதிருந்த டிரோன் கண்காட்சியை நேரில் கண்டு ரசித்தார்.
இதில் 1500 ட்ரோன்கள் மூலம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவங்கள் வானில் ஜொலித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இது ஒருபுறம் இருக்க திமுக இளைஞரணியின் இரண்டாவது நாள் மாநாட்டையொட்டி, திமுகவினருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலைஞர் பேசியதுபோன்ற ஒரு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை திமுகவினர் இணையப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | விஜய் செய்து காட்டினார்! ரஜினி, கமல் செய்தார்களா? விஜய் ஆதரவாக பேசும் அதிமுக!
கலைஞர் கருணாநிதி பேசுவதுபோல் இருக்கும் அந்த ஏஐ தொழில்நுட்ப வீடியோவில் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். "இளைஞரணி முதல் மாநில மாநாடு வெள்ளி விழா மாநாடாகச் சிறப்பாக நடைபெற்றது. இதுதான் அடுத்த தலைமுறையினரைக் கழகத்தின் பக்கம் ஈர்த்தது. 1970 -ல் திருச்சியில் நடந்த கழக மாநில மாநாட்டில் நான் ஐம்பெரும் முழக்கங்களை முழங்கினேன். அதில் ஐந்தாவது முழக்கம் மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதாகும். இதைத் தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கொள்கை.
இப்போது 2024இல் நடக்கும் லோக்சபா தேர்தலை நாம் எதிர்கொள்ளும் நிலையில், ஜனநாயக போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சி பாசறையாக அமைகிறது இளைஞரணி மாநில மாநாடு. அந்த கொள்கையை மீட்டெடுக்கத் தம்பி உதயநிதி தலைமையில் மாங்கனி மாவட்டமான சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது" என தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி பேசுவதுபோல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஏஐ தொழில்நுட்ப வீடியோ திமுகவினர் மத்தியில் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அச்சுஅசலாக கலைஞர் பேசுவது போல் அந்த வீடியோ இருப்பதாக தெரிவிக்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.
மேலும் படிக்க | ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி - புகைப்படங்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ