கொரோனா தடுப்பூசியை போடும் டாக்டர் alias அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்திற்கு 5 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ள நிலையில் இன்று கூடுதலாக 5 லட்சத்திற்கு 8 ஆயிரம் கோவிஷீல்டு மருந்துகள் கிடைத்துள்ளன.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 20, 2021, 02:53 PM IST
  • முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மருத்துவர்களுக்கு தயக்கம் இருந்ததை ஒப்புக்கொண்டார் விஜயபாஸ்கர்
  • கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்
  • இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி வந்தது
கொரோனா தடுப்பூசியை போடும் டாக்டர் alias அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: இன்று தமிழகத்திற்கு வந்த கொரோனா தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் (DMS) வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகளை, பொதுச் சுகாதாரத் துறை வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தில் ஆய்வு செய்ததாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழகத்திற்கு 5 லட்சத்து 56 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ள நிலையில் இன்று கூடுதலாக 5 லட்சத்திற்கு 8 ஆயிரம் கோவிஷீல்டு மருந்துகள் கிடைத்துள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு (Tamil Nadu) மொத்தம் 10 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதை மக்களுக்கு கொடுப்பதற்கு 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இது வரை 25 ஆயிரத்து 908 பேர் மருந்துகளை எடுத்துக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும். தனியார் மருத்துவமனைகளுக்கும் (Hospitals) மருந்துகள் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவர் சங்கத் தலைவர், செவிலியர்கள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதற்கு முதலில் மருத்துவர்களுக்கு தயக்கம் இருந்த்தை சுட்டுக்காட்டினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். தற்போது அந்த நிலைமை இல்லை மாறியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவரான (Doctor) தானே நாளை மறுதினம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உள்ளதாகவும், இனிமேல் யாருக்கும் எந்தவித தயக்கமும் தேவையில்லை என்று அவர் கூறினார்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

More Stories

Trending News