திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி!!

Last Updated : Oct 4, 2017, 02:40 PM IST
திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி!! title=

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் இன்று திடீா் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சமீப காலமாக உடல்நலக்குறைபாடு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அரசியலில் இருந்து சற்று விலகி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதனால் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆளும் கட்சி செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது துரைமுருகன் திடீா் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

துதொடர்பாக திமுக-வினர் கூறுகையில்:-

முதன்மை செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.

Trending News