விஜய்யின் அரசியல் கட்சி குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி!

பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை.. இல்லை.. இல்லை.. ஊடக நண்பர்கள் இனி இந்த கேள்வி கேட்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 11, 2024, 04:34 PM IST
  • பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை.
  • கூட்டணி என்ற செய்தி பொய்யானது.
  • எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் பேச்சு.
விஜய்யின் அரசியல் கட்சி குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி!

கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூரில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக, பாஜக உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து விலகிய 10000த்திற்கும் மேற்ப்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.  அதிமுகவின் துணை பொதுசெயலாளர் K.P.முனுசாமி அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, வாக்களித்த மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு என தனி திட்டத்தை திமுக இதுவரை கொண்டுவரவில்லை. சட்டமன்றத்தில் முன்வரிசையில் உள்ள திமுக அமைச்சர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அவர்கள் எங்கு செல்ல வேண்டுமென அங்கு செல்ல இருக்கிறார்கள், தற்போது எல்லா அமைச்சர்களும் தூக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | 39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டி - பாஜக அதிரடி!

உப்பை சாப்பிட்டவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அதிமுகவிற்கு துரோகம் செய்து திமுகவில் அமைச்சரான செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அதிமுகவிற்கு துரோகம் செய்தவர் ஆண்டவனால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக என்கிற இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்துக்கொள்வார்கள் என பேசி வருகிறார்கள், அதிமுகவை பொருத்தவரை பாஜக உடன் கூட்டணி  இல்லை இல்லை இல்லை. ஆ.ராசா அரசியல் அநாதை ஆக போகிறார். நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழக்கிறார். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்ப்படுத்திய ராசா திருந்தாவிட்டால் அதிமுக தொண்டர்களால் திருத்தப்படுவீர்கள் என எச்சரித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் பாலகிருஷ்ணா ரெட்டி, வேலுமணி,தங்கமணி, அன்பழகன், எம்பி தம்பிதுரை, எம்எல்ஏக்கள் பங்கேற்றிருந்தனர். பின்னர் காரில் இருந்தவாறு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து பலர் இன்னும் பேசுகிறார்கள். அதிமுக பாஜக உடன் ரகசிய கூட்டணி உள்ளது என்று பேசுகிறார்கள். ஏற்கனவே நாங்கள் தீர்மானம் போட்டு பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று இன்று உறுதியாக சொல்கிறோம், பாஜகவுடன் கூட்டணி இல்லை ஊடக நண்பர்கள் இனி இந்த கேள்வி கேட்க வேண்டாம். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி உள்ளது. இன்னும் 10 நாட்களில் தெரியும் எந்த கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளது என்று அதிமுக கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்பட்டது குறித்த கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம், நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பவர்களுக்கு எங்களது கூட்டணியில் இடமில்லை என்பது பாஜக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. 2024-ஆம் எம்.பி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். திமுக, அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு வருவார்கள். முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் பாஜகவிற்கு வந்தது என்பது மோடிக்கு ஆதரவு மற்றும் சமூதாய  பணி செய்யவே என அவர்களே சொல்கின்றார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவர்கள் எங்களிடம் லேகியம் வாங்கி சாப்பிடுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் இருப்பது 2 அணி தான், அது பாரத பிரதமராக மோடி வேண்டுமா?, வேண்டாமா?. மீண்டும் பிரதமராக மோடி ஆட்சிப் பொறுப்பில் அமருவது உறுதி என்று பேசி இருந்தார்.

மேலும் படிக்க | தாமரை சின்னத்தில் போட்டி, மாநிலங்களவை சீட் கொடுக்க முடியாது - தேமுதிகவுக்கு பாஜக செக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News