EPSvsOPS : ஓபிஎஸ்-தான் துரோகத்தின் அடையாளம் : ஜெயக்குமார் காட்டம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை துரோகத்தின் அடையாளம் என விமர்சித்து உள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jun 27, 2022, 01:04 PM IST
  • ஓபிஎஸ்தான் துரோகத்தின் அடையாளம்
  • விமர்சிக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
  • யாருக்கு துரோகம் செய்தார் ஓபிஎஸ்?
EPSvsOPS : ஓபிஎஸ்-தான் துரோகத்தின் அடையாளம் : ஜெயக்குமார் காட்டம் title=

துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ். கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது பொதுக்குழு கூட்டத்தில் தான் தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கி 11.30 மணிக்கு முடிவடைந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி உள்ளதால் கட்சியின் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வது குறித்தான கூட்டம் இன்று நடைபெற்றது எனவும், கூட்டத்திற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் தலைமை தாங்கினார் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | OPSvsEPS : அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் படம் அகற்றம்

இந்த கூட்டத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது, தற்போது இந்த பொதுக்குழு கூட்டத்திற்க்கான அழைப்பிதம் மற்றும் தபால் அழைப்பிதம் அனுப்ப முடிவு செய்யபட்டு உள்ளது. 

75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 நபர்கள் வந்திருந்தனர்,முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட்ட  சில நபர்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியாது குறித்து கடிதம் அனுப்பி உள்ளனர்,பெரும்பாலான நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | சுற்றுப் பயணத்தில் கைகோர்க்கும் ஓபிஎஸ் - சசிகலா? தேனியில் முக்கிய முடிவு

தொடர்ந்து முரசொலி கருத்து குறித்து பதில் அளித்த அவர் அவர்கள் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது. தமிழகத்திற்கு தமிழக மக்களுக்கு பல்வேறு சமயங்கங்களில் துரோகம் இழைத்த கட்சி திமுக இது மக்களுக்கும் தெரியும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம் என்றும் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவருடைய செயல்பாடுகள் அப்படிதான் உள்ளது என்றும் அவர் கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பது பொதுக்குழு கூட்டத்தில் தான் தெரிய வரும் என தெரிவித்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்டாயபடுத்தி அழைக்கவில்லை அப்படி ஒரு நிலையிலும் நாங்கள் இல்லை எங்களுடன் உள்ளவர்கள் உண்மையான தொண்டர்கள் என தெரிவித்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News